வறுவல் கமகமக்க...
உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது சிறிது சோம்புவை தூளாக்கி தூவினால் கமகமக்கும்.
லஸ்ஸி சுவையாக இருக்க...லஸ்ஸியில் சர்க்கரையை குறைத்து தேன் கலந்து ஃபிரிட்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பருகினால் சுவை கூடுதலாக இருக்கும்.
நேந்திரங்காய் வத்தல் செய்ய...
நேந்திரங்காய் தோலை ஆவியில் வேக வைத்து உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து காயவைத்தால் நேந்திரங்காய் வத்தல் ரெடி.
பூரி சீக்கிரமாக பொரிய...
பூரிமாவை சப்பாத்திக்கு தேய்ப்பது போல தேய்த்து கத்தியால் நான்கு பகுதிகளாக வெட்டி ஒவ்வொன்றாக பொரித்தால், பூரியும் சீக்கிரமாக கிடைக்கும். பூரிமாவும் சீக்கிரம் காலியாகிவிடும்.
சட்னி செய்யும்போது...
எந்த வகை சட்னி செய்தாலும் சிறிதளவு வெள்ளைப்பூண்டு சேர்த்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
போண்டா மிருதுவாக இருக்க...
உளுந்து போண்டா செய்யும்போது, கூடவே வேகவைத்த உருளைக்கிழங்கைத் தோல் நீக்கிப் போட்டு அரைத்துச் செய்தால் உளுந்து போண்டா மிருதுவாக மெத்தென்று இருக்கும்.
இஞ்சி சாதம் தயார் செய்ய...
தேங்காய் சாதம், மாங்காய் சாதம் கலப்பது போல, பெரிய துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி விட்டு துருவி எடுத்து உப்பு, காரம், பூண்டு விழுது போட்டு வதக்கி உதிரி, உதிரியான சாதத்தில் கொட்டிக் கலந்தால் சூப்பரான இஞ்சி சாதம் ரெடி.
சேப்பங்கிழங்கு சிப்ஸ் செய்ய...
சேப்பங்கிழங்கை வேகவைத்துத் தோலை அகற்றி வட்ட வட்டமாக நறுக்கி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
கேரட் சூப் செய்யும்போது...
கேரட்டில் சூப் செய்தால் அதில் துளி சேமியாவை வறுத்துப் போட்டால் சூப் கெட்டியாக பார்க்க அழகாகவும் இருக்கும்.
No comments:
Post a Comment