Thursday, May 17, 2012

மைக்ரோவேவனை பாதுகாக்கும் முறை


புதிதாக மைக்ரோவேவ் அவன் வாங்கியிருக்கிறோம். கேஸ் அடுப்பில் செய்கிற எல்லா சமையலையும் அதில் செய்யலாமா? வெறுமனே சூடுபடுத்த

மட்டும்தான் பயன்படுமா? வேறு எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?
 காபி, டீ சூடு பண்ணுவதிலிருந்து, சாதம் வடிப்பது, உருளைக்கிழங்கு, வெண்டைக்காய் ரோஸ்ட் செய்வது, கீரை மசியல், கேசரி, பாயசம்... இப்படி எல்லா வகை சமையலையும் மைக்ரோவேவ் அவனில் தாராளமாகச் செய்யலாம். சாதா அடுப்பில் செய்வதைவிட ஆரோக்கியமாகவும் சுவையாகவும் இதில் சமைக்க முடியும்.

மைக்ரோவேவில் சமைப்பதற்கென்றே விற்கப்படுகிற கண்ணாடிப் பாத்திரங்கள்தான் பெஸ்ட். எவர்சில்வர், அலுமினியப் பாத்திரங்களை வைக்கக்

கூடாது. சாதம் வடிக்க மொத்தமே 7 நிமிடங்கள்தான் ஆகும். அந்த 7 நிமிடங்களில் இடையில் 2 முறையாவது பாத்திரத்தை வெளியே எடுத்து

கிளறிவிட்டு மறுபடி உள்ளே வைக்க வேண்டும்.

கிளறி விட்டுச் சமைக்கிற இந்த டெக்னிக் மைக்ரோவேவில் சமைக்கிற எல்லாவற்றுக்கும்  பொருந்தும். வழக்கத்தைவிட இதில் மிகக் குறைந்த எண்ணெயே செலவாகும். வெண்டைக்காய், பீன்ஸ், கீரை என காய்கறிகள் கலர் மாறாமல் வெந்திருக்கும்.

மைக்ரோவேவில் சமையல் முடிந்துவிட்டதற்கான ஒலி வந்ததும், பாத்திரத்தை வெளியே எடுத்து விட வேண்டும். உள்ளேயே இருந்தால் சூடாக

இருக்கும் என வைத்திருந்தால், நேரம் முடிந்த பிறகும், மைக்ரோவேவ் சமையலைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

பாத்திரங்கள் அடிபிடிப்பதோ, சமைக்கிற உணவு பொங்கி வழிவதோ இருக்காது. சமையல் முடிந்ததும், உள்ளே இருக்கும் சுழலும் தட்டை எடுத்து

சோப்புத் தண்ணீரில் கழுவித் துடைத்தால் போதும். அவனின் உள்பகுதியை ஈரத்துணியால் துடைத்துக் காய வைத்தாலே சுத்தமாகி விடும்.

No comments:

Post a Comment