Thursday, May 17, 2012

ஸ்டஃப்டு காலிஃபிளவர் பரோட்டா


கோதுமை மாவு - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
துருவிய காலிஃபிளவர் -1 கப்,
காலா நமக் -1 சிட்டிகை,
நறுக்கிய பச்சை மிளகாய் - 2 டீஸ்பூன்,
இஞ்சி-பூண்டு விழுது -1டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா - 2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
சீரகம் -2 டீஸ்பூன்,
ஓமம் -1 டேபிள் ஸ்பூன்,
எண்ணெய் அல்லது நெய் -2 டீஸ்பூன்.


கோதுமை மாவை சலித்து, சப்பாத்தி மாவாகப் பிசைந்து கொள்ளவும். கடாயை சூடாக்கி, எண்ணெய் அல்லது நெய் விடவும். சீரகம், ஓமம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கியதும், துருவிய காலிஃபிளவர், உப்பு, பொடி வகைகள், பச்சை மிளகாய், காலா நமக் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கவும். தயாராக உள்ள காலிஃபிளவர் மசாலாவை சிறு உருண்டைகளாகச் செய்து, உள்ளே அடைத்து, பின் மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.

இட்டு, சூடான தவாவில் போட்டு, இருபுறமும் வேக வைத்து வெந்ததும் நெய்விட்டுப் பொன்னிறமாக எடுத்துப் பரிமாறவும். டென்ஷனை விரட்ட ஸ்டஃப்டு காலிஃபிளவர் பரோட்டா சாப்பிடலாம்

No comments:

Post a Comment