Thursday, May 17, 2012

ஸ்டஃப்டு புடலங்காய்

*பிஞ்சு புடலங்காய் 6 துண்டுகள்
*முட்டைக்கோஸ் துருவல் 50 கிராம்
*பெரிய வெங்காயம் 1கப்
*கரம்மசாலா 1 டீஸ்பூன்
*மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
*கடலை மாவு 1டே.ஸ்பூன்
*எண்ணெய்
*உப்பு
*பிஞ்சு புடலங்காயை வட்ட வடிவத்தில் நறுக்கி 6 துண்டுகள் எடுத்துக் கொள்ளவும். முட்டைக்கோஸ் துருவல் 50 கிராம், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப், கரம்மசாலா ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், கடலை மாவு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். கடலை மாவை தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

*வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து முட்டைக்கோஸ், வெங்காயம், மஞ்சள் தூள், மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து லேசாக வதக்கி பின் வறுத்த கடலை மாவைக் கலந்து புடலங்காயில் ஸ்டப் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு இரண்டு புறமும் புடலங்கா யை வேகவைத்து எடுத்தால் ஸ்டப்டு புடலங்காய் ரெடி.

No comments:

Post a Comment