Thursday, May 17, 2012

குளுகுளு கிச்சன்!

மற்ற நாள்களில் மணிக்கணக்காக சமையலறையே கதி என இருப்பவர்களுக்குக் கூட, வெயிலில் கிச்சனை எட்டிப் பார்ப்பதே அலர்ஜியாகலாம். ஆனாலும், சமையலுக்கென்ன சம்மர்


ஹாலிடேஸா விட முடியும்? சமையலையும் சமையலறையையும் குளுகுளுவென வைத்துக்கொள்ள இதோ சில டிப்ஸ்...
நீண்ட நேரம் பிடிக்கிற உணவுகளை கோடை முடிகிற வரை தவிர்க்கப்பாருங்கள்.

ஒன்றுக்கு இரண்டாக பிரஷர் குக்கர் வைத்துக்கொண்டு, பெரும்பான்மை சமையலை அதிலேயே முடிக்கப் பாருங்கள். சீக்கிரம் கெட்டுப் போகாத அயிட்டங்களாக சமையுங்கள். உதாரணத்துக்கு தேங்காய் சேர்த்து சமைக்கிற உணவுகள் சீக்கிரம் கெட்டுப் போகலாம். அதைத் தவிர்க்க அவற்றை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டி வரும்.

மறுபடி மறுபடி சூடு படுத்த, அடுப்பின் அருகே செல்ல வேண்டியிருக்கும். அதைத் தவிர்க்கலாமே... மற்ற நாள்களில் நீங்கள் எப்படியோ... கோடை முடிகிற வரையிலாவது, அடுத்த நாளைக்கான காய்கறிகளை வெட்டுவது, மசாலா அரைப்பது, கிழங்குகளை வேக வைத்துத் தோலுரிப்பது போன்றவற்றை வெயில் இல்லாத இரவு நேரத்திலேயே தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

மைக்ரோவேவை அதிகம் உபயோகப்படுத்துங்கள். சூடுபடுத்த மட்டுமல்ல சமையலுக்கும்! ஒவ்வொரு வேளைக்கும் புதுசு புதுசாக செய்யாமல், இரவுக்கும் சேர்த்து, கொஞ்சம் கூடுதலாகவே சமைத்து வையுங்கள்.

சூடாக சாப்பிட்டால் மட்டுமே ருசியாக இருக்கும் என்கிற உணவுகளைத் தவிர்த்து, ஆறினாலும் சுவை மாறாத அயிட்டங்களை
அதிகம் செய்யுங்கள்.

No comments:

Post a Comment