*கடல்பாசி - 3-ல் ஒரு பகுதி
*சீனி - ஒரு குவளை
தேங்காய் பால் - ஒரு கோப்பை
*ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
*உப்பு - ஒரு சிட்டிகை
*கடல்பாசி 3ல் ஒரு பங்கை வெட்டி வைக்கவும்ஒரு சட்டியில் பாதியளவு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
*கொதிக்கும் நீரில் கடல்பாசியை போட்டு கரையும் வரை கொதிக்க விடவும். அதில் உப்பு போடவும்.கடல்பாசி நன்றாக கரைந்ததும் சீனி சேர்க்கவும்.
*சீனி போட்டதும் ஒரு கரண்டியால் கலக்கி விடவும். சீனி கரைந்ததும் தேங்காய் பால் ஊற்றவும்.பால் சேர்த்தவுடன் கொஞ்ச நேரத்தில் மேலே நுரை போல் வரும், பால் கொதிக்க ஆரம்பிக்குமுன் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். தேங்காய் பால் ஊற்றிய பின் கொதிக்க விட கூடாது.
*ஒரு தட்டில் உங்களுக்கு பிடித்த ஃபுட்கலர் கொஞ்சம் போட்டு வைக்கவும்.கடல்பாசியை ஒரு வடிதட்டு மூலம் கலர் போட்டு வைத்த தட்டில் ஊற்றவும்.
*உடனே கலரை கலக்கி விடவும். இல்லையென்றால் கலர் அடியில் இருக்கும்.நன்றாக ஆறியபின் தேவையான வடிவில் வெட்டலாம் அல்லது அச்சில் வைத்தும் எடுக்கலாம். இப்போது டபுள் கலர் காட்டும், தேங்காய் பால் சேர்ந்து மேலேயும், தண்ணீர் சேர்ந்த கடல்பாசி கீழுமாக இருக்கும்.
*பாலை கொதிக்க விட்டால் இப்படி டபுள் கலர் தெரியாது, சுவை அலாதியாக இருக்கும். ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்.
No comments:
Post a Comment