
ஃப்ரெஷ் பச்சை பட்டாணி -1 கப்,
மிளகுத்தூள் -அரை டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.
பட்டாணியை உரித்து, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தண்ணீரைக் கொட்டாமல், பட்டாணியை மட்டும் தனியே எடுத்து அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து, அரைத்த பட்டாணி விழுது, உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி சேர்த்துக் கெட்டியாக வதக்கவும்.
கோதுமை மாவில், வதக்கிய பட்டாணிக் கலவை, உப்பு சேர்த்து, பட்டாணி வேக வைத்த தண்ணீரை விட்டுப் பிசைந்து, பூரிக்களாக இட்டு, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எக்சாம் ஃபீவர் வராமலிருக்க பட்டாணி பூரி சாப்பிடலாம்
No comments:
Post a Comment