Thursday, May 17, 2012

மனம் கவரும் வரவேற்பறை

நம் இல்லத்திற்கு வரும் அனைவரையும் வரவேற்கும் இடம் வரவேற்பரை தான் மிக முக்கியமான இடமும் கூட அங்குள்ள பொருட்களையும், அசத்தும் விதமாக அலங்கரிக்க வேண்டும். முக்கியமாக வரவேற்பரையில் வைக்கப்பட்டிருக்கும் ஷோபா மேஜை அலங்காரம் முக்கியமானது. இது அனைவரின் கவனத்தையும் கவர கூடிய ஒன்று இதில் சந்தேகம் ஏதுமில்லை. அதனால் அதிக அக்கறை காட்ட வேண்டியது இங்கு தான். எனவே உள்அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் உங்களுக்காக..


மனம் கவரும் மலர்கள்

மேஜையின் மீது அழகிய எம்ப்ராய்டிங் போட்ட துணிகளை விரிக்கலாம். அதன் பின் மேஜையின் மீது சிறிய அளவிலான கிண்ணம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி மலர்களைப் போட்டு அலங்கரிக்கலாம். இதில் வித விதமான மலர்களை போட்டு வைக்கலாம். சிறிய பூ ஜாடியை வைத்து அதில் பல வண்ண மலர்களால் அலங்கரிப்பது அறைக்கு பளிச் தோற்றத்தை ஏற்படுத்தும். மேஜையின் வடிவத்திற்கு ஏற்றவாறு மலர்களால் அலங்கரிப்பது அழகை அதிகரிக்கும்.

வண்ண மயமான தொங்கும் திரைகள்

வரவேற்பறையில் வெள்ளை, சிகப்பு,  நீலம், என உங்களுக்கு விருப்பமான நிறங்களில் தொங்கும் திரைகள் அமைத்தால் வரவேற்பரை இன்னும் அழகாக தோற்றமளிக்கும்

நாளிதழ்கள், அறிவுப்பூர்வமான புத்தகங்கள் 

புத்தகங்கள், நாளிதழ்கள் போன்றவைகளை மேஜை மீது அழகாக அடுக்கி வைப்பது வரவேற்பறையின் அழகினை அதிகரிக்கும். வருபவர்கள் வந்த நேரத்தில் ஏதாவது வேலை இருப்பின் அவர்களை படிக்க சொல்லி விட்டு செல்லலாம்.

மனம் கவரும் வரவேற்பறை

மேஜையின் நடுவில் மெழுகுவர்த்தியால் அலங்கரிப்பது, எழிலோடு, ஸ்டைலாகவும் இருக்கும். மெழுகுவர்த்தி ஏற்றுவது மனதிற்கு அமைதியை தரும். அதுவும், வரவேற்பு அறையின் மேஜையில் அலங்கரிக்கப்பட்ட மெழுகுவர்த்தியை மாலை நேரத்தில் அதனை ஏற்றி வைப்பது அழகோடு மன அமைதிக்கு வழிவகுக்கும்.

பழமையான பொருட்கள்

மேஜை மீது பாரம்பரியம் மிக்க விரிப்புகளை பயன்படுத்துவது அழகை அதிகரிக்கும். சணல் மேஜை விரிப்பை பயன்படுத்துவது அழகாக இருப்பதோடு பாதுகாப்பானதாகவும் இருக்கும். வெண்கலத்தான் ஆன சிலைகளை மேஜை மீது அலங்கரிப்பது பாரம்பரியமாக இருப்பதோடு அழகை அதிகரிக்கும். ஆனால் அது ஸ்டைலுக்கு மட்டுமே ஏற்றது.

உன்னதமான அழகு

மேஜையில் இடம் காலியாக இருக்கிறது என்பதற்காக கண்டதையும் கொண்டு நிரப்பவேண்டாம். எளிமையான சிறிய அளவிலான பொருட்களே அழகே அதிகரிக்கும். உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

No comments:

Post a Comment