Thursday, May 17, 2012

கேரட் சாதம்

அரிசி - 2 ஆழா‌க்கு.
கேரட் துருவல் -2 கப்.
வெங்காயம் -1.
பச்சைமிளகாய் 3.
கரம் மசாலாத்தூள்.
வறுத்த நிலக்கடலை - கை‌ப்‌பிடி.
கறுவே‌ப்‌பிலை, கொத்தமல்லித் தழை.
உப்பு - தேவையான அளவு.
எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.
கடலைப்பருப்பு -1 கர‌ண்டி.
உளு‌ந்த‌ம் பரு‌ப்பு -1 கர‌ண்டி.
கடுகு.
சீரகம்.



அரிசி முழுவது‌மாக வேகுவத‌ற்கு மு‌ன்னதாக கொ‌ஞ்ச‌ம் உதிரியாக சாத‌த்தை வடித்து வை‌த்து‌க் கொள்ளவும். அ‌ரி‌சி வடி‌க்கு‌ம்போதே சாத‌த்‌தி‌ற்கு‌த் தேவையான உ‌ப்பை‌ப் போ‌ட்டு வேக வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

சாத‌த்தை அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் கொ‌ட்டி ஆற வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.அடு‌ப்‌பி‌ல் வாணலி வை‌த்து எண்ணெயைச் சூடாக்கி அதில் கடுகு, சீரகம் போ‌ட்டு தா‌ளி‌‌க்கவு‌ம்.அ‌திலேயே கடலைப் பருப்பு, உளு‌ந்த‌ப் பரு‌ப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

‌பி‌ன்ன‌ர் நறு‌க்‌கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, கேரட் துருவலை அதில் கொட்டி வதக்கவும்.கேர‌ட் ந‌ன்கு வத‌‌ங்‌கியது‌ம் கர‌ம் மசாலா‌த் தூ‌ள் சே‌ர்‌த்து கா‌ல் ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ‌வி‌ட்டு கேர‌ட்டை வேக ‌விடவு‌ம்.இக்கலவையை வெந்த சாதத்தில் நன்கு கலக்கவும்.

வறுத்த நிலக்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து சாதத்தில் மேலாகத் தூவவும்.கறுவே‌ப்‌பிலை, கொத்தமல்லித் தழையை‌த் தூ‌வி சூடாக ப‌ரிமாறவு‌ம்.

No comments:

Post a Comment