Thursday, May 17, 2012

காய்கறி பீஸ்ஸா

*நறுக்கிய வெங்காயம்,
*பிஸ்ஸா சாஸ் - 1/2கப்
*மொஸரெல்லா சீஸ்-1/2கப்
*தக்காளி,குடைமிளகாய்,
*வெள்ளரி,விருப்பமான காய்கறிகள் - சிறிது
*ஆல்பர்ப்பஸ் ப்ளோர்-2கப்
*ஏக்டிவ் ட்ரை யீஸ்ட்-1டீஸ்பூன்
*ஆலிவ் ஆயில்-2டீஸ்பூன்
*சர்க்கரை-1டேபிள்ஸ்பூன்
*உப்பு-1டீஸ்பூன்
*வெதுவெதுப்பான தண்ணீர்-1கப்


*ஒரு கப்வெதுவெதுப்பான நீரில் யீஸ்ட்,சர்க்கரை,உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் (சற்றே சூடான இடத்தில்) வைக்கவும்.மாவுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, நுரைத்திருக்கும் யீஸ்ட் கலவையை சிறிதுசிறிதாக ஊற்றி பிசையவும்.

*மாவு கெட்டியாக இல்லாமல், தளர இருக்கவேண்டும். பிசைந்த மாவின்மீது சிறிது ஆலிவ் ஆயில் தடவி,ஈரத்துணியால் மூடி இரண்டு மணி நேரம் வைக்கவும்.

*மாவிலிருக்கும் காற்று குமிழ்கள் மறையும்படி நன்றாகப் பிசைந்து மீண்டும் ஒருமணிநேரம் வைக்கவும்.மாவு திரும்பவும் சற்றே அதிகரித்திருக்கும். அதனை மீண்டும் நன்றாகப் பிசைந்து, சப்பாத்திக்கட்டையால் தேவையான வடிவத்துக்கு தேய்க்கவும்.

*தேய்த்த பிஸ்ஸா பேஸை பேக் செய்யும் பானில்(நான் கேக் பேக்செய்யும் பான்தான் உபயோகித்தேன்) வைக்கவும்.பிஸ்ஸாவின் விளிம்பில், ஒருஇன்ச் இடம் விட்டு, பிஸ்ஸா சாஸை சீராக தடவி, டாப்பிங் பொருட்களை அடுக்கவும்.இறுதியாக சீஸை பிஸ்ஸா முழுவதும் தூவி, ஓரங்களுக்கு ஆலிவ் ஆயில் தடவிவிடவும்..35 நிமிடங்கள் பேக் செய்யவும்.

*பீஸ்ஸா ரெடி!பிஸ்ஸா சூடாக இருக்கும்போதே கட்செய்துவைக்கவும்.ஆறிவிட்டால் கட்செய்வது கஷ்டம்.

No comments:

Post a Comment