Thursday, May 17, 2012

பாலக் பனீர்

பாலக் கீரை  -2 கட்டு,
பனீர் துண்டுகள்  -2 கப்,
வெங்காயம் - கால் கிலோ,
தக்காளி  -கால் கிலோ,
உப்பு  -தேவைக்கேற்ப,
மிளகாய் தூள்  -4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்  -1 டீஸ்பூன்,
கரம் மசாலா  -1 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி-  சிறிது.

விழுதாக அரைக்க:
இஞ்சி  -1 துண்டு,
பூண்டு - 8 பல்,
காய்ந்த மிளகாய்,
பட்டை  -1.

தாளிக்க:

எண்ணெய் - கால் கப்,
சீரகம்  -2 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை  -1.


பாலக் கீரையைக் கழுவி, நறுக்கி, பிரஷர் குக்கரில் வேக வைத்து மசித்துக் கொள்ளவும். தக்காளியை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, தாளிப்புப் பொருள்களைச் சேர்த்து, அரைத்த விழுது சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும்.

உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து மேலும் வதக்கவும். தக்காளி விழுது சேர்த்துத் தளதளவெனக் கொதிக்கும் போது, பாலக் விழுது சேர்த்து, இன்னும் சிறிது உப்பு சேர்த்து இரண்டும் கலந்து கொதித்ததும், நறுக்கிய கொத்தமல்லி, பனீர் துண்டுகள், தண்ணீர் (தேவைப்பட்டால்) சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கிப் பரிமாறவும். கண் எரிச்சலுக்கும் டென்ஷனுக்கும் பாலக் பனீர் சாப்பிடலாம்

No comments:

Post a Comment