Tuesday, April 19, 2011

அடை செ‌ய்யு‌ம்போது

கே‌ழ்வரகு அடை செ‌ய்யு‌ம் போது அ‌தி‌ல் முரு‌ங்கை‌க் ‌‌கீரையை சே‌ர்‌த்து செ‌ய்வா‌ர்க‌ள். புது ‌விதமாக க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி, பு‌‌தினாவு‌ம் சே‌ர்‌த்து செ‌ய்யலா‌ம். ரு‌சி அபாரமாக இரு‌க்கு‌ம்.
ஒரு புது விதமான அடை செய்வதற்கு, அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்தால் சாப்பிடலாம்.

பரு‌ப்பு எ‌ல்லா‌ம் சே‌ர்‌த்து அரை‌த்து அடை செ‌ய்யு‌ம் போது அ‌‌தி‌ல் தே‌ங்காயை துரு‌வி சே‌ர்‌த்து அடை செ‌ய்தா‌ல் ‌சுவை இ‌ன்னு‌ம் அ‌திகமாக இரு‌க்கு‌ம்.

உ‌ப்புரு‌ண்டை செ‌ய்யு‌ம் மா‌வி‌ல் அடை சு‌ட்டு‌ப் பாரு‌ங்க‌ள். இ‌ன்னொரு முறை இதையே செ‌ய்‌ய‌ச் சொ‌ல்லுவா‌ர்க‌ள் குடு‌ம்ப‌த்‌தின‌ர்.
சிலரு‌க்கு இ‌னி‌ப்பு சுவை ‌பிடி‌க்காது. அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க்‌கிழ‌ங்கை ‌விரு‌ம்ப மா‌ட்டா‌ர்க‌ள்.

ஆனா‌ல் அவ‌ர்களு‌ம் ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க்‌கிழ‌ங்கை சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் அ‌த‌ற்கு எ‌ளிதான வ‌ழி உ‌ள்ளது.

கே‌ழ்வரகு அடை, பரு‌ப்பு அடை போ‌ன்றவை செ‌‌ய்யு‌ம் போது அ‌தி‌ல் வேக வை‌த்து தோலு‌ரி‌த்த ச‌ர்‌க்கரை வ‌ள்‌ளி‌க்‌கிழ‌ங்கை ம‌சி‌த்து போடவு‌ம்.

அதனை அழகான அடைகளாக‌த் த‌ட்டி வேக வை‌த்து எடு‌க்கவு‌ம். இத‌ற்கு இ‌னி‌ப்பு சுவை ம‌ட்டும‌ல்லாம‌ல் காரமான இணை உணவுக‌ள் கூட ரு‌சியாக இருக‌்கு‌ம்.

மேலு‌ம், ச‌ர்‌க்கரை வ‌‌ள்‌ளி‌க் ‌கிழ‌ங்கை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து சு‌‌ட்டு சா‌ப்‌பி‌ட்டா‌ல் இ‌னி‌ப்பு சுவை தெ‌ரியாது.  
 பெரு‌ம்பாலான ‌வீடுக‌ளில‌் குழ‌ம்பு‌க்கு ஏ‌ற்ற அள‌வி‌ற்கு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்றாம‌ல், குழ‌ம்பு அள‌‌வி‌ற்கு எ‌‌ண்ணெ‌‌ய் ஊ‌ற்றுவா‌ர்க‌ள்.

இது உடலு‌க்கு ‌மிகவு‌ம் கெடுத‌ல். உட‌லி‌ல் கொழு‌ப்பை அ‌திக‌ரி‌த்து ப‌ல்வேறு உபாதைகளை ஏ‌ற்படு‌த்‌தி ‌விடு‌ம்.

குழம்பிலுள்ள எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை தனியாக நீக்க வேண்டு‌ம் எ‌ன்றா‌‌ல் ஒரு ந‌ல்ல வ‌ழி ‌உ‌ள்ளது.

குழம்பை சிறிது நேரம் கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அது இறு‌தி‌வி‌ட்டிரு‌க்கு‌ம். அதனை தே‌க்கர‌ண்டி பய‌ன்படு‌த்‌தி நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.

இவ்வாறு பயன்படுத்துவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.

மேலு‌ம், தே‌ங்கா‌ய் வறு‌த்து அரை‌க்கு‌ம் குழ‌ம்பு வகைக‌ளி‌ல் எ‌ண்ணெ‌ய் ச‌த்து அ‌திகமாக இரு‌க்கு‌ம். எனவே நா‌ம் குறைவாக எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டா‌ல் போது‌ம்.
 நீ‌ண்ட நா‌ட்களு‌‌க்கு வர வே‌ண்டிய பொரு‌ட்களை கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டிய‌ி‌ல் வை‌ப்பது ‌மிகவு‌ம் தவறு.

மு‌த‌லி‌ல் அ‌ந்த ப‌ட்டிய‌லி‌ல் இட‌ம்‌பிடி‌ப்பது ஊறுகா‌ய். ஊறுகா‌ய் ஊற ஊற‌த்தா‌ன் சுவையே. அதனை எ‌‌த்தனை நா‌‌ட்களு‌க்கு வே‌ண்டுமானாலு‌ம் வை‌த்‌‌திரு‌ந்து பய‌ன்படு‌த்தலா‌ம். அதனை கு‌‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌க்கவே வே‌ண்டா‌ம்.

வ‌த்த‌க் குழ‌ம்பு, பு‌ளி‌க் குழ‌ம்பு போ‌ன்று கடைக‌ளி‌ல் வா‌ங்கு‌ம் குழ‌ம்பு வகைகளையு‌ம் அலமா‌ரிக‌ளி‌ல் வை‌த்தே‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். அவைக‌‌ள், இய‌ல்பாகவே, கெ‌ட்டு‌ப் போகாத வ‌ண்ண‌ம் தயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டவை. அவ‌ற்றை கு‌ளி‌ர்பத‌ன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வை‌த்து கெ‌ட்டு‌ப் போக ‌விடவே‌ண்டா‌ம்.

வெறு‌ம் பழ‌த்தை அ‌ப்படியே வை‌க்க‌க் கூடாது. அவ‌ற்றை ‌ஒரு பா‌லி‌தீ‌ன் பை‌யி‌ல் போ‌ட்டு ந‌ன்கு க‌ட்டி கு‌ளி‌ர்பதன‌ப் ப‌ெ‌ட்டி‌யி‌ல் வை‌ப்பதுதா‌ன் ‌சிற‌ந்தது.

கு‌ளி‌ர் பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் எதை வை‌த்தாலு‌ம், அத‌ன் ‌நிலை எ‌ப்படி இரு‌க்‌கிறது எ‌ன்பதை அ‌வ்வ‌ப்போது பா‌ர்‌த்து, கெ‌ட்டு‌ப் போன பொரு‌‌ட்களை தூ‌க்‌கி எ‌றி‌ந்து‌விடு‌ங்க‌ள்.
வீ‌ட்டி‌ல் எ‌ப்போதாவது பரோ‌ட்டா செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌சில குளறுபடிகளையு‌ம் செ‌ய்து‌விடுவோ‌ம்.

அதை த‌வி‌ர்‌க்க ‌சில யோசனைக‌ள்

பரோ‌ட்டா‌வி‌ற்கு உ‌ள்ளே மசாலா வை‌த்து செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இ‌ல்லை எ‌ன்றா‌ல் பரோ‌ட்டா ஊ‌றி பொத பொத எ‌ன்று ஆ‌கி‌விடு‌ம்.

முள்ளங்கி வை‌த்து பரோட்டா செ‌ய்தா‌ல், மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் அ‌திக ‌நீ‌ர் இரு‌க்கு‌ம், அதனை த‌னியாக எடு‌த்து‌விடவு‌ம். அதன் தண்ணீரை ‌வீணா‌க்காம‌ல் அதிலேயே பரோ‌ட்டா‌வி‌ற்கு மாவு பிசையலாம்.

தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்டஃப்பிங் செய்து பரோட்டா செய்தால், பரோட்டா நன்றாகவும் இருக்கும் உடலு‌‌க்கு‌ம் ந‌ல்ல‌து.

இது வட இ‌ந்‌திய‌ர்க‌ள் அ‌திகமாக செ‌ய்யு‌ம் சமைய‌ல் முறையாகு‌ம். எதையு‌ம் நா‌ம் த‌னியாக ஒது‌க்காம‌ல், எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்து பா‌ர்‌ப்போ‌ம். ச‌ரியாக வரு‌ம்வரை அதை ‌விடுவ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ப்போ‌ம்.  
 வீ‌ட்டி‌ல் எ‌ப்போதாவது பரோ‌ட்டா செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்றா‌ல் ‌சில குளறுபடிகளையு‌ம் செ‌ய்து‌விடுவோ‌ம்.

அதை த‌வி‌ர்‌க்க ‌சில யோசனைக‌ள்

பரோ‌ட்டா‌வி‌ற்கு உ‌ள்ளே மசாலா வை‌த்து செய்யும்போது ஸ்டஃப்பிங் டிரை ஆக இருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். இ‌ல்லை எ‌ன்றா‌ல் பரோ‌ட்டா ஊ‌றி பொத பொத எ‌ன்று ஆ‌கி‌விடு‌ம்.

முள்ளங்கி வை‌த்து பரோட்டா செ‌ய்தா‌ல், மு‌ள்ள‌ங்‌கி‌யி‌ல் அ‌திக ‌நீ‌ர் இரு‌க்கு‌ம், அதனை த‌னியாக எடு‌த்து‌விடவு‌ம். அதன் தண்ணீரை ‌வீணா‌க்காம‌ல் அதிலேயே பரோ‌ட்டா‌வி‌ற்கு மாவு பிசையலாம்.

தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்டஃப்பிங் செய்து பரோட்டா செய்தால், பரோட்டா நன்றாகவும் இருக்கும் உடலு‌‌க்கு‌ம் ந‌ல்ல‌து.

இது வட இ‌ந்‌திய‌ர்க‌ள் அ‌திகமாக செ‌ய்யு‌ம் சமைய‌ல் முறையாகு‌ம். எதையு‌ம் நா‌ம் த‌னியாக ஒது‌க்காம‌ல், எ‌ல்லாவ‌ற்றையு‌ம் செ‌ய்து பா‌ர்‌ப்போ‌ம். ச‌ரியாக வரு‌ம்வரை அதை ‌விடுவ‌தி‌ல்லை எ‌ன்று முடிவெடு‌ப்போ‌ம். 
  ஏலக்காயைப் பொடித்துப் போடவும் என்றவுடன் பலரும் ஏலக்காயை அப்படியே அம்மியில் வைத்து பொடிக்க முயற்சி செய்வர்.

இ‌ப்படி செ‌ய்வதா‌ல் ஏல‌க்கா‌ய் ச‌ப்பையாகுமே‌த் த‌விர அரைபடாது. ஏல‌க்கா‌ய் நன்கு பொடியாக வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், வெறும் வாணலியில் ஏல‌க்காயை சிறிது நேரம் வறுத்து பிறகு ச‌ர்‌க்கரை சே‌ர்‌த்து பொடிக்கவும்.

வறு‌ப்பதா‌ல் ஏலு‌க்கா‌ய் எளிதாய் பொடியாகும். ச‌ர்‌க்கரை வை‌ப்பதா‌ல் அ‌ம்‌மி‌யி‌ல் கூட எ‌ளிதாக பொடியா‌க்கலா‌ம்.

அதேசமயம், ஏலக்காயைத் தட்டிப் போடவும் என்ற இடத்தில், வறுக்காமல் அப்படியே அம்மியில் வைத்து, இலேசாக இடித்துப் போடலாம்.

ஏல‌க்கா‌ய் சுவை, மண‌ம் ‌பிடி‌த்தவ‌ர்க‌ள், ஓ‌ரிரு ஏல‌‌க்காயை ந‌ன்கு பொடி‌த்து, ‌வீ‌ட்டி‌ல் தே‌‌னீரு‌க்கு‌ப் பய‌ன்படு‌த்து‌ம் ச‌ர்‌க்கரை‌யி‌ல் கல‌ந்து வை‌த்து ‌விடலா‌ம்.
 குடைமிளகாய் ஸ்டஃப்பிங் செய்யும்போது அது முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்டஃப் செய்து சமையுங்கள். சாப்பிடவும் ருசியாகக் காணப்படும், பார்ப்பதற்கு கண்ணைக் கவரும்.

நார்த் இண்டியன் டிஷ் செய்யும் போது சிறிதளவு சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும். ஸ்பைசியாகவும் காணப்படும்.

எப்போதும் ஒரே விதமான ரசம் வைத்து சலிப்படைந்தவர்கள் முருங்கைக்காயில் ரசம் வைக்கலாம். தக்காளியுடன் ஐந்து பீஸ் முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும், சுவையு‌ம் இது எ‌ன்ன புது‌க் கு‌ழ‌ம்பு எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்.

எப்போதும் வெங்காயம் நறுக்கினால் கண்களிலிருந்து கண்ணீர் வரும். வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். ஆக்ஸிடைஸ் ஆவதால் நிகழும் அழுகை குறையும்.

அரோக்கியத்திற்கு, கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பு உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.
  எப்போதும் சா‌ம்பா‌ர், கார‌க் குழ‌ம்பு எ‌ன்று ஒரே குழ‌ம்பவை‌த்தஇதுதா‌னஇ‌ன்றகாலடிபனு‌க்கு‌ம் எ‌ன்றசொ‌ன்னா‌லகுழ‌ந்தைக‌ளமுக‌த்தசு‌ழி‌ப்பா‌ர்க‌ள்.

அதனா‌லஒரே விதமான குழம்பை டிபனுக்கு வைக்காமல், அதையே கிரேவி வகைகளை செ‌‌ய்து கொடு‌ங்க‌ள்.

த‌க்கா‌ளி, வெ‌ங்காய ‌‌கிரே‌வி, ப‌னீ‌ர் மசாலா ‌கிரே‌வி, உருளை‌க்‌கிழ‌ங்கு ம‌சிய‌ல் போ‌ன்றவை செ‌‌ய்து கொடு‌க்கலா‌ம்.

இ‌‌ப்படி ‌‌கிரே‌வி செ‌ய்யு‌ம்போது ஒருபிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்து செ‌ய்யு‌ங்க‌ள்.

இ‌ப்படி வே‌ர்‌க்கடலை சே‌ர்‌த்து ச‌ெ‌ய்தால் கிரேவி ரிச்சாகவும், சுவை அபாரமாகவும் காணப்படும்.

பொதுவாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும் பொருட்களை வாங்குவதுதான் சிறந்தது.

இதற்கு மற்றுமொரு ஆதாரமாக சீரகக் கலப்படத்தைக் கூறலாம்.

வடமாநிலங்களில் இருந்து வரும் சீரகத்தில் பெரும்பாலும் ஒயிட் சிமென்ட் கலக்கப்படுகிறது. இது எடையைக் கூட்டப் பயன்படுகிறது.

மேலும் சதக்குப்பை எனப்படும் மருந்து பொருள் ஒன்றை சீரகத்துடன் கலந்து விற்பனை செய்கிறார்கள் உள்ளூர் வியாபாரிகள்.

பாக்கெட்டில் வாங்கப்பட்ட நல்ல சீரகத்துடன் இந்த கலப்பட சீரகத்தைப் பார்த்தால் உங்களுக்கேப் புரியும்.

No comments:

Post a Comment