மாவு அரைத்த மறுநாள் இட்லி அல்லது தோசை சுடலாம். இது சாதாரண விஷயம்தான். ஆனால் அடுத்தடுத்த நாள் அதை வீணாக்காமல் விதவிதமாக டிபன் செய்ய சில ஆலோசனை.
அடுத்த நாள் மீதமுள்ள சற்றே புளித்த மாவுடன் பெருங்காயம், பச்சை மிளகாய், கடுகு தாளித்து ஊத்தப்பமாகச் செய்யலாம்.
அதற்கு அடுத்த நாளும் மாவு மீதமிருந்தால், அந்த மாவுடன் கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கலந்து கொள்ளலாம். இதை இட்லியாக ஊற்றலாம். இந்த இட்லி புளிப்பில்லாமல் புதுச்சுவையுடன் இருக்கும். அத்துடன் இதில் நிறைய புரதச் சத்து இருப்பதால் உடலுக்கும் ஆரோக்கியம் தரக் கூடியது.
இந்த மாவுடன் முருங்கைக் கீரையையும் சேர்த்து அடையாகச் சுடலாம்.
4வது நாள் இருக்கும் மாவுடன் கொஞ்சம் மசாலா சேர்த்து மசாலா இட்லியாகவும் செய்யலாம். அல்லது எண்ணெயில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் போன்றவற்றை வறுத்து அதனை மிக்சியில் அரைத்து மாவுடன் கலந்து சுவையான தாளித்த தோசை சுடலாம்.
கருவேப்பிலை, கொத்துமல்லி, புதினா போன்ற நல்ல மணமுள்ள கீரை வகைகளை பிரிஜ்ஜில் வைப்பதற்கு முன் ப்ரௌவுன் பேப்பர் அல்லது நாளிதழ் பேப்பரில் சுற்றிய பிறகு பிளாஸ்டிக் பைகளில் போட்டு வையுங்கள். இது அவற்றின் மணம் பிரிஜ்ஜில் உள்ள மற்ற உணவுப் பொருட்களில் பரவாமல் தடுப்பது மட்டுமல்லாமல் அவை பச்சைப்பசேலென்று புதிதாக இருக்கவும் உதவும்.
தயிரின் மேலே உருவாகும் தண்ணீரை நிறைய சமயம் கொட்டி விடுவோம். அதற்குப் பதில் அதனை ஈர்த்து சாப்பாத்தி செய்யும் போது அந்த தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முருங்கைப்பூ மற்றும் முருங்கை இலைகளை சாத வகைகள், சைவ அயிட்டங்கள் போன்றவை செய்யும் போது அலங்கரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் காய்கறிகளை சூப்புக்காக வேக வைக்கும் போது அதனுடன் இதனையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ளலாம், மணமும், சத்தும் கிடைக்கும்.
ஆம்லெட்டுக்கு முட்டை அடிக்கும்போது, கொஞ்சம் பாலை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆம்லெட் மெத்து மெத்தென்று ஸாஃப்ட்டாக இருக்கும்.
மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா? பிரச்சனை மோர் தயிரில் இல்லை. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் தயிரை வைத்தால் சீக்கிரம் புளிக்காது. எளிய வழியும் கூட.
முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து மீதம் வந்துவிட்டதா? கவலை வேண்டாம், சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு குழம்பாக்கி விடலாம். தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்தால் போதும்.
இட்லி மாவை கெட்டியாக அரைக்காமல் சற்று தண்ணியா அரைத்துவிட்டீர்களா.. கவலையே வேண்டாம். கவலையை விடுங்க. கொஞ்சம் சோளா மாவு, கொஞ்சம் பிரட் துணுக்குகள். இரண்டையும் மாவில் சேர்த்து அடித்து கலக்குங்கள். மாவும் கெட்டியாகும், இட்லியும் சுவையாக இருக்கும்.
சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்வது என்று வருத்தப்பட வேண்டாம். கைவசம் உருளைக்கிழங்கு இருந்தால் அதனை சின்ன சின்ன துண்டுகளாக்கி சூப்பில் போடுங்கள. உப்பு கரிப்பு மாயமாய் மறைந்துவிடும். சிறிது நேரத்தில் உருளைக் கிழங்கை எடுத்து விடுங்கள்.
பால் திரிந்து போய்விட்டால், தண்ணீரை வடிகட்டி விட்டு பாலை ஒரு வாணலியில் ஊற்றி, சிறிது சர்க்கரை சேர்த்து இளஞ்சூட்டில் கலக்கி கொண்டுவந்தால் திரட்டுப்பால் போன்று வரும். ஏலக்காய் பொடித்துப் போட்டு இறக்கி வைத்துக் கொண்டால் ருசியாக இருக்கும்.
உளுந்து வடைக்கு ஊறவைக்கும்போது 1 கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து வடை சுட்டால் அதிகமாக எண்ணெய் குடிக்காது.
தக்காளி, வெங்காயம் போன்ற சாலட் தயாரிக்கம்போது தயிருக்குப் பதிலாக இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் ஊற்றி பிசைந்து காய்கறிகளை பரிமாறினால் வெகு சுவையாக இருக்கும்.
சாம்பார் பொடி தயார் செய்வதற்கு மிளகாய் கொத்துமல்லி காய வைக்கும்பொழுது, கொஞ்சம் கறிவேப்பிலையும் காம்போடு சேர்த்து காயவைத்து பொடி செய்தால் சாம்பார் மணம் பிரமாதமாக இருக்கும். சாம்பார் செய்யும்போது கறிவேப்பிலை தேடி ஓட வேண்டியதும் இல்லை.
காய்கறி வாங்க சந்தைக்குச் செல்லும் போது காய்கறிகளைப் பார்த்து வாங்கும் திறன் வளர்ந்து விடும். புதிதாக கடைக்குச் செல்வோருக்கு நமது இந்த குறிப்புகள் பொருந்தலாம்.
வெங்காயத்தை அழுத்திப் பார்க்க வேண்டும். அமுங்கினால் அதன் உள்ளே அழுகிப் போயிருக்க வாய்ப்பிருக்கிறது. அமுங்காத வெங்காயம்தான் புதிது.
அதேப்போல வெங்காயம் முளை விட்டதாக இருந்தால் அதனை வாங்கி வந்து நறுக்குவதும் சிரமம். எனவே முளைவிடாத வெங்காயத்தை வாங்குவது நல்லது.
சின்ன வெங்காயத்தில் சிவப்பு நிறத்துடன் கூடிய வெங்காயமாக இருப்பது மிகவும் நல்லது.
தக்காளி வாங்கும் போது சிலது பழுத்ததாகவும், சிலவற்றை செங்காயாகவும் பார்த்து வாங்கினால் சில நாட்களுக்கு வரும்.
பால் வாங்கி வந்து திரிந்து விட்டால் அதனை தூக்கி எறிய வேண்டாம். அப்படியே அதனை சுண்டக் காய்ச்சிக் கொண்டே வந்து அதில் தேவையான அளவு சர்க்கரையும், நெய்யும் விட்டுக் கிளறினால் சுவையான பால்கோவா தயார்.
தேங்காய் பர்பி தயாரிக்கும்பொழுது சில சமயம் பதம் தவறி முருகி விடலாம். அப்படி நேரும்போது அதை பாலில் ஊற வைத்து, மீண்டும் கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி இறக்கினால், பர்பி மறுபடியும் சரியான பதத்திற்கு வந்துவிடும்.
கீரை சமைக்க தேவையான அளவு பருப்பு இல்லாத சமயத்தில், கீரையுடன் அதிக அளவில் வெங்காயம், தக்காளி, பூண்டு, ருசிக்கேற்ப பச்சை மிளகாயைப் போட்டு வேக வைத்து கடைந்தால் சுவையாக இருக்கும்.
உளுந்து வடைக்கு ஊறவைக்கும்போது பச்சரிகியை உடன் ஊற வைக்க மறந்து விட்டால் உளுந்து வடை ஆட்டியதும் பச்சரிசி சேர்த்து பிசைந்து வடை சுட்டால் அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment