உங்கள் வீட்டில் அரைத்தெடுக்கும் இட்லி மாவு மீதமாகிறதா? இப்படி இனி நீங்கள் சொல்லவே மாட்டீர்கள்.
முதல் நாள் அரைத்த இட்லி மாவை மறுநாள் இட்லி ஊற்றி வேகவைக்கிறோம். அல்லது தோசை சுடுகிறோம்.
இதனை பிரிட்ஜில் வைத்தாலும் மறு நாள் லேசாக புளித்திருக்கும். அப்போது அதில் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு ஊத்தாப்பம் சுடுகிறோம்.
சரி அப்பவும் மீதமிருந்தால் என்ன செய்வது என்று யோசிக்காதீர்கள். அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய், காய்ந்த மிளகாய், இருந்தால் வேர்க்கடலை எல்லாம் எண்ணெயில் வறுத்து கொரகொரப்பாக அரைத்து மாவில் சேர்த்து தோசை சுட்டுக் கொடுங்கள்.
அப்படியும் மாவு மீந்துவிட்டால், இதே விழுதை அரைத்து அதில் நெய்யில் வதக்கிய முருங்கைக் கீரையை சேர்த்து அடை செய்து கொடுக்கலாம். என்ன தலை லேசாக சுற்றுகிறதா? இனி உங்கள் வீட்டில் மாவு வீணாகாது அல்லவா?
பலர் வீடுகளில் கிருமி உற்பத்திக் கூடமாக குளிர்பதனப் பெட்டி இருக்கும். அப்படி இல்லாமல், எப்போதும் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது நல்லது.
கோடைக்காலத்தில் வாரம் ஒரு முறையும், குளிர்காலத்தில் வாரம் இரண்டு முறையும் டி-ப்ராஸ்ட் செய்ய வேண்டும். மலை போல ஐஸ் கட்டுவதால் கரண்ட் செலவு கூடும்.
ப்ரிட்ஜ் கதவை அடிக்கடித் திறப்பதோ, திறந்துவைத்து விடுவதோ கூடாது. கதவை வேகமாக அடித்து சாத்தினால் சில சமயம் மூடாமல் போய்விடலாம்.
வாரம் ஒருமுறை அல்லது பத்து நாள்களுக்கு ஒரு தடவையாவது ஃப்ரிட்ஜின் உட்புறத்தை நன்றாகத் துடைக்க வேண்டும். ஃப்ரிட்ஜை வருடத்துக்கு இரு முறையாவது சர்வீஸ் செய்ய வேண்டும். கெட்டுப் போனப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும்.
கெட்டுப் போகும் நிலையில் இருக்கும் உணவுகளை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டாம்.
பொதுவாக ஒரு சமையலறையை அமைக்கும்போது எப்படியெல்லாம் அமைக்க வேண்டும் என்று கல்லூரியில் ஹோம் சயின்ஸ் படிக்கும்போது சொல்லித் தருவார்கள்.
சமையலறை எல் போன்ற வடிவம், அல்லது யு வடிவம் இப்படி இரண்டில் ஒரு வடிவில்தான் சமையலறை அமைக்கப்படும்.
இது இரண்டுமில்லாமல் மூன்றாவதாக இணையான வடிவில் (parallel) அமைக்கப்படுவதும் உண்டு. இந்த "பேரலல்' வடிவில் இரண்டு மேடைகள் இருப்பதுபோல அமைக்கப்படும். சிலசமயம் ஒரே மேடை மட்டும் அமைக்கப்படும். இடம் சிறியது என்றால் அதில் "யு' அல்லது "எல்' வடிவில் அமைப்பதுதான் சிறந்தது.
சமையலறையில் மேடை சிறிது நீளமாகவும், அகலமாவும், உயரம் குறைந்ததாகவும் இருப்பது மிகவும் நல்லது.
உயரமான சமையலறை சமைப்பவரை விரைவில் களைப்பாக்கும் என்பதை உணருங்கள். அவ்வாறு உயரமாக இருந்தால் நிற்கும் இடத்தில் சிமண்டாலோ அல்லது மரத்தாலோ உயரத்தைக் கூட்டிக் கொள்வது நல்லது.
பலருக்கும் தேங்காயை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிவதில்லை. அதனால் முற்றியத் தேங்காய் அல்லது அழுகிய தேங்காயை வாங்கி வந்து வீட்டில் திட்டு வாங்குவார்கள்.
தேங்காய் வாங்கும்போது முதலில் அதன் தோற்றத்தைப் பார்க்க வேண்டும். அதாவது கோனையாகவோ, முறுகலாகேவா இருக்கக் கூடாது.
நிறம் வெளுப்பாக இருந்தால் மிகவும் நல்லது. அதே சமயம், நிறம் கறுத்திருந்தால் அதனை வாங்கவே வேண்டாம். சில சமயம் அது அழுகிப் போயிருக்க வாய்ப்புள்ளது.
தேங்காய் முற்றியதாக இருக்குமா என்று சந்தேகம் இருந்தால், அதன் குடுமிப் பகுதியை சிறிது இழுத்துப் பாருங்கள். லேசாக இழுத்ததும் ஒரு சில முடிகள் தனியாக கழண்டு கொண்டு வந்தால் அந்த தேங்காய் முற்றியது.
ஆனால், ஒவ்வொரு நாறும் ஒன்றோடு ஒன்று இணைந்து வராமல் சிக்காக இருந்தால் அந்த தேங்காய் இளசு என்று தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தேங்காயை உடைக்கும் முன் சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் எளிதாகவும், வடிவாகவும் உடையும்.
கேரட்டை அதிகமாக உண்பது உடலுக்கு நல்லது. சில குழந்தைகள் கேரட்டை பொரித்துக் கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதன் இனிப்பு சுவை காரத்துடன் ஒத்துவராமல் போவதுதான் இதற்குக் காரணம்.
இதற்கு பதிலாக கேரட்டை சூப்பில் சேர்த்துக் கொடுக்கலாம். கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கை வேக வைத்து மிளகு தூள் சேர்த்து சூப் செய்யலாம்.
அவசரத்திற்கு கேரட் சாதம் செய்யலாம். இது சுவையாக இருக்கும். சூடாக, ஒரு கார வறுவலுடன் கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும், உருளைக் கிழங்கு மசாலா செய்யும் போது அதனுடன் கேரட்டையும் நறுக்கிப் போட்டு வேக வைத்து மசித்து மசாலா செய்யலாம். சுவையும் கூடுதலாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
கட்லெட் செய்யும் போதும், பிரெட் பகோடா செய்யும் போதும் அவித்த உருளைக் கிழங்குடன் கேரட்டையும் அவித்துப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு சாதத்தில் கேரட்டைப் போட்டு வேக வைத்து தனியாக எடுத்து நன்கு மசித்து ஊட்டிப் பழகலாம்.

No comments:
Post a Comment