Monday, April 25, 2011

வெல்லக் கொழுக்கட்டைக்கு

வெல்லக் கொழுக்கட்டை செய்வது மிகவும் எளிது. ஆனால் அதனை பலரும் பக்குவமாக செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
வெல்லக் கொழுக்கட்டை செய்ய மாவு அரைக்கும்போது கடைசியாக மெலிதான ரவை ரவையாக இருக்கும்படி மாவை அரைக்கச் சொல்லவும்.

வெல்லத்தை அதிகமாக சேர்த்துவிடாமல் மாவுக்கு சமமான வெல்லத்தை மட்டும் சேர்க்கவும்.

அதிகமான வெல்லத்தை சேர்த்துவிட்டால் கொழுக்கட்டை வேகாமல் உதிர்ந்து விடும்.

ஏலக்காயை வெல்லப் பாகில் போட்டு காய்ச்சவும். வெல்லப் பாகை அதிகமாக கொதிக்க விடாமல் எடுத்துவிடவும்.

அடுப்பில் 10, 10 கொழுக்கட்டைகளை 5 நிமிட இடைவெளியில் அடுக்கி வேக விட்டால் ஒன்றோடு ஒன்று ஒட்டவே ஒட்டாது. 
பச்சரிசிக்கு பதிலாக புழுங்கல் அரிசி மாவை பயன்படுத்தினால் கொழுக்கட்டை மேலும் சுவையாக இருக்கும்.

தேங்காயை துருவியவுடன் மிக்சியில் நீர் சேர்க்காமல் 2 நிமிடம் ஓடவிட்டு பின்னர் பூரணம் செய்தால் தேங்காயில் கட்டி இல்லாமல் பூரணம் எளிதாக வரும்.

பூரணத்திற்கு ஏலக்காயை பொடித்து தனியாக சேர்க்காமல், பருப்பு அரைக்கும் போதே சேர்த்து அரைத்துவிட்டால் வாசனை பரவலாக இருக்கும்.

கொழுக்கட்டைகளை கையில் உருட்டும் போது எண்ணெய் தடவிக் கொண்டு செய்தால் வேகும்போது கொழுக்கட்டைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.

கொழுக்கட்டை மாவு மிகவும் கெட்டியாகவும் இருந்தவிடக் கூடாது, தளதளவென்றும் இருக்கக் கூடாது. பந்து போன்று உருட்டினால் உருண்டு திரண்டு வர வேண்டும்.  
எ‌ரிவாயுவை சே‌மி‌க்க பல வ‌ழிக‌ள் உ‌ள்ளன. அதாவது கு‌க்கரை‌ப் ப‌ய்னபடு‌த்துவதே ந‌ல்ல ‌விஷய‌ம்.

அ‌திலு‌ம் ‌சிலரு‌க்கு கு‌க்க‌ரி‌‌‌ல் வேக வை‌த்த சாத‌ம் ‌பிடி‌க்காது. வடி‌த்து சா‌ப்‌பி‌ட்டா‌ல் தா‌ன் ‌பிடி‌க்கு‌ம். இதுபோ‌ன்றவ‌ர்களு‌ம் எ‌ரிவாயுவை சே‌மி‌க்கலா‌ம்.

எ‌ப்படி எ‌ன்று பாரு‌ங்க‌ள். அதாவது, சாத‌த்தை பா‌தி வெ‌ந்த உடனேயே ‌ந‌ன்கு ‌‌கிள‌றி இற‌க்‌கி வை‌த்து ‌மூடி போ‌ட்டு மூடி ‌விடு‌ங்க‌ள்.

ச‌ரியாக 5 ‌நி‌மிட‌ம் க‌ழி‌த்து சாத‌த்தை ‌கிள‌றி பாரு‌ங்க‌ள். உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அளவு வெ‌ந்து இரு‌க்கு‌ம். இ‌ல்லை எ‌ன்றா‌ல் இ‌ன்னு‌ம் ‌சி‌றிது நேர‌ம் மூடி வையு‌ங்க‌‌ள்.

உ‌ங்களு‌க்கு‌த் தேவையான அள‌வி‌ற்கு சாத‌ம் வெ‌ந்து‌வி‌‌ட்டா‌ல் அதனை வடி‌த்து ‌விடு‌ங்க‌ள். கொ‌ஞ்ச நேர‌த்‌தி‌ல் ‌நி‌மி‌த்‌தி ஆற வை‌த்து‌விடு‌ங்க‌ள் அ‌வ்வளவுதா‌ன் உ‌ங்களு‌க்கு‌த் தேவையான சாதமு‌ம் தயா‌ர், எ‌ரிவாயுவு‌ம் ‌மி‌ச்சமாகு‌ம்.
விநாயகரு‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்த கொழுக்கட்டைகள் பல வகைகள் உள்ளன. அதாவது மோதகம் எனப்படும் கொழுக்கட்டையில் பூரணமாக எதை வைக்கலாம் என்பதுதான் அது.

அதாவது, தேங்காயைத் துருவி அதில் சர்க்கரை சேர்த்து ஒரு பூரணம் தயார் செய்யலாம்.

உடைத்தக் கடலை, சர்க்கரை சேர்த்து அது ஒரு பூரணமாக வைக்கலாம்.

எள்ளை வெள்ளத்துடன் சேர்த்து பொடித்து அதை வைத்தும் மோதகம் செய்யலாம்.
கீரை வகைக‌ள் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது. ‌கீரையை வா‌ங்‌கி வ‌ந்து கடை‌ந்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம். பொ‌ரி‌த்து‌ம் சா‌ப்‌பிடலா‌ம்.

‌‌
கீரையை பரு‌ப்பு‌ப் போ‌ட்டு வேக வை‌த்து கடையு‌ம் போது, ‌பு‌ளி‌ப்பு சுவை ‌பிடி‌த்தவ‌ர்க‌ள் ‌இர‌ண்டு ப‌ட்டா‌‌ணி அளவு ‌பு‌ளியையு‌ம் சே‌ர்‌த்து கடை‌ந்தா‌ல் சுவை அ‌ற்புதமாக இரு‌க்கு‌ம்.

கீரையை பொ‌‌றிய‌ல் செ‌ய்யு‌ம் போது, கடுகு போ‌ட்டு தா‌ளி‌க்கு‌ம்போது, ‌சி‌றிது உளு‌ந்தம‌் பரு‌ப்பை அ‌திகமாக‌ப் போ‌ட்டு பொ‌‌ரி‌த்து ‌பி‌ன்ன‌ர் வெ‌ங்காய‌ம் சே‌ர்‌த்து வத‌க்‌கினா‌ல் சுவை கூடுதலாக இரு‌க்கு‌ம்.

‌‌கீரை பொ‌‌றிய‌லி‌ல் தே‌ங்காயை‌த் துரு‌வி கடை‌சியாக‌க் கொ‌ட்டி‌க் ‌கிள‌றினா‌ல் எ‌ல்லோரு‌ம் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.

கீரை ருசியாக இருக்க வேண்டுமானால் கீரையை சிறிது சர்க்கரை கலந்த நீரில் ஊறவைத்து பிறகு சமைக்கலா‌ம். இதனா‌ல் ப‌ச்சை ‌நிறமு‌ம் மாறாம‌ல் இரு‌க்கு‌ம்.  

No comments:

Post a Comment