ஆனால் எதுவாக இருந்தாலும் அரிசியைப் பாதி வேக வைத்து சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது.
சிலருக்கு குக்கர் சாதம் பிடிக்காது. எனவே அதுபோன்றவர்கள் சாதத்தை பாதியாக வேக வைத்து சாப்பிட்டு வருவது நல்லது.
இப்போது வந்துள்ள மின்சாரக் குக்கரில் குக்கர் முறையில் சாதம் வேக வைக்கப்பட்டாலும் சாதம் உதிரியாக வடித்ததைப் போன்று காணப்படுகிறது.
மேலும், சாதம் பாதி வெந்ததும் இறக்கி மூடி போட்டு வைத்துவிட்டு சிறிது நேரம் கழித்து வடிப்பதால் சாதம் சரியான அளவிற்கு வெந்தும் இருக்கும். எரிவாயுவும் மிச்சமாகும்.
எப்படி சாதம் தயார் செய்தாலும், உடனடியாக சாதத்தை நன்கு பரப்பி ஆற வைத்தால் அதிக நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
எலுமிச்சம் சாறு எடுப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதாவது எலுமிச்சம் சாறு பிழிந்து குடிக்கலாம் அல்லது எலுமிச்சம் சாதம் செய்யலாம்.
இந்த சமயங்களில் எலுமிச்சம் பழத்தில் சரியான அளவு சாறு வராமல் போகும். இந்த சமயத்தில் கடைக்கு வேகமாக ஓடி இன்னும் சில பழங்களை வாங்கி வருவோம்.
இதனைத் தவிர்க்க, எலுமிச்சம் பழங்களை வாங்கி வந்து அதனை உப்பு ஜாடியில் போட்டு வைத்து விட்டால் அவை எப்போதும் புதியதாக இருக்கும். இப்படி செய்வதால் எலுமிச்சம் பழங்களை அதிக நாட்கள் பாதுகாக்கலாம்.
மேலும், உப்பு ஜாடியில் போட்டு வைப்பதால் எலுமிச்சம் பழத்தில் இருந்து நிறையச் சாறும் கிடைக்கும்.
எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்குவதற்கு முன்பு, அதனை கையால் அழுத்தி தரையில் நன்கு உருட்ட வேண்டும். இப்படி செய்துவிட்டு பின்னர் நறுக்கினால் பழத்தில் இருந்து எளிதாக சாறைப் பிரிக்கலாம்.
சில சமையல் பொருட்களை வேக வைக்கும்போது ஒரு வித துர் நாற்றம் வரும்.
ஏன், நம் அக்கம் பக்கத்தில் சைவம் மட்டும் சாப்பிடுபவர்கள் இருப்பார்கள். நமக்கோ அசைவம்தான் பிடிக்கும். அப்படி இருக்கும் போது அவர்களுக்கு துர்நாற்றத்தை ஏற்படுத்தாத வகையில் நாம் சமைக்க வேண்டியது அவசியமாகிறது.
ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு அல்லது ஒரு சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து வேக வைக்கலாம்.
மீன் வறுக்கும்போது வரும் நாற்றத்தைப் போக்க, மீன் வறுப்பதற்கு அருகே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தால் நாற்றம் இருக்காது.
இறால், களான் போன்றவை வேகும்போது சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வேக வைக்கலாம்.
மீன் குழம்பு கொதி வரும்போது மீன் நாற்றம் வரக் கூடாது. அப்படி வந்தால் ஒன்று நீங்கள் மீனை சரியாக சுத்தம் செய்யவில்லை அல்லது மீன் கெட்டுப் போயிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மிக்சியில் மாவு அரைப்பவர்கள் நிறைய விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் பெண்கள் அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை என்றும், அதிக நேரமாகிறது என்றும், இட்லி செய்தால் கடினமாக இருக்கிறது என்றும் புலம்புவார்கள்.
முக்கியமான சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு மிக்சியில் மாவு அரைத்தால் இந்த பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம்.
புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால் விரைவாகவும், சுலபமாகவும் அரைபடும்.
மேலும், மாவு அரைக்கும் முன்பு நன்கு ஊறிய அரிசியை சிறிது நேரம் குளிர்பதனப் பெட்டியில் (பிரிட்ஜ்)ல் வைத்தால் அரைபடும்போது மாவு சூடாவது தவிர்க்கப்படும்.
மேலும், மாவு அரைக்கும்போது தெளிக்கும் நீரும், குளிர்ந்த நீராக இருந்தால் நன்றாக இருக்கும்.

வீட்டில் செய்யும் தேங்காய் பர்ஃபி என்றாலே எப்போதும் வெள்ளை நிறத்தில் பார்த்து பார்த்து போராடித்துவிடும்.
அதே பர்ஃபியை கொஞ்சம் கலர் கலராகவும், கொஞ்சம் கூடுதல் சுவை கலந்தும் தயாரிக்க இதோ ஒரு வழி.
பர்ஃபி செய்து முடித்து இறுதிகட்டத்தில் சாக்லெட், ஸ்ட்ராபெரி பானத்துக்கான பவுடரை சேர்த்துக் கிளறுங்கள்.
அவ்வளவுதான், வண்ண வண்ண நிறங்களில் ருசியான பர்ஃபி தயார். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

No comments:
Post a Comment