Monday, April 18, 2011

தோசை ச‌ரியாக வராம‌ல் போனா‌ல்

மிக்ஸியில் இட்லி மாவு அரைக்கும் போது அரிசி மாவு நன்றாக அரைபடவில்லை, நேரமாகிறது என்பார்கள். ‌பிர‌ச்‌சினையை‌ப் போக்க எளிய வழி புழுங்கள் அரிசியை வெந்நீரில் ஊறவைத்து அரைத்தால் சுலபமாக அரைபடும்.
தேங்காய் பர்பி தயாரிக்கும்பொழுது சில சமயம் பதம் தவறி முருகி விடலாம். அப்படி நேரும்போது அதை பாலில் ஊற வைத்து, மீண்டும் கிளறி இறக்கும் சமயம் நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிது தூவி இறக்கினால், பர்பி மறுபடியும் சரியான பதத்திற்கு வந்துவிடும்.

எலுமிச்சம் பழங்களை உப்பு ஜாடியில் போட்டு வைத்து விட்டால் அவை எப்போதும் புதியதாக இருக்கும். அந்த எலுமிச்சம் பழங்களிலிலிருந்து நிறையச் சாறும் கிடைக்கும்.

காய்கள், பழங்கள் வாங்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருப்பதையே வாங்க வேண்டும். அவற்றில்தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

கா‌ய்க‌றிகளை அ‌வ்வ‌ப்போது வா‌ங்‌கி‌ப் பய‌ன்படு‌த்து‌ங்க‌ள். வாடி வத‌ங்‌‌கிய கா‌‌ய்க‌‌றிக‌ளி‌ல் முழுமையாக ச‌த்து‌க் ‌கிடை‌க்காம‌ல் போகலா‌ம். 


பொதுவாக பலரு‌ம் ‌கீரை‌யி‌ன் மக‌‌த்துவ‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளாம‌ல் ஏனோ தானோ எ‌ன்று சமை‌ப்பா‌ர்‌க‌ள். ஆனா‌ல் வார‌த்‌தி‌ல் 2 நா‌ட்களாவது ‌கீரையை உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது.

பூ ‌விடாம‌ல் இரு‌க்கு‌ம் ‌‌கீரையை‌ப் பா‌ர்‌த்து வா‌ங்க வே‌ண்டு‌ம். ‌கீரை‌யி‌ல் பூ இரு‌ந்தா‌ல், ஒ‌வ்வொரு பூவையு‌ம் எடு‌த்து‌வி‌ட்டு‌த்தா‌ன் சமை‌க்க வே‌ண்டு‌ம். ஏனெ‌னி‌ல் பூ ‌ஜீரணமாவது ‌மிகவு‌ம் கடின‌ம்.

கீரை ருசியாக இருக்க வேண்டுமானால் கீரையை சிறிது சர்க்கரை கலந்த நீரில் ஊறவைத்து பிறகு சமைக்கலா‌ம்.

கீரையை க‌ட்டோடு வா‌ங்‌கி வ‌ந்த அ‌ப்படியே வை‌த்து ‌வி‌ட்டா‌ல் எ‌ளி‌தி‌ல் அழு‌கி‌ப் போ‌ய்‌விடு‌ம். க‌ட்டை‌ப் ‌பி‌ரி‌த்து உலர வை‌த்து அதை எடு‌த்து வை‌க்கலா‌ம்.

‌‌‌கீரையை சமை‌க்கு‌ம் போது அ‌‌திகமாக த‌க்கா‌ளியு, வெ‌ங்காய‌ம், பூ‌ண்டு ஆ‌கியவ‌ற்றை சே‌ர்‌த்தா‌ல் சுவை அருமையாக இரு‌க்கு‌ம்.
தோசை மாவு எ‌ப்போது‌ம் கெ‌ட்டியாகவு‌ம் இ‌ல்லாம‌ல், ‌மிகவு‌ம் ‌நீ‌ர்‌த்து‌ம் இ‌ல்லாம‌ல் ‌‌மிதமான பத‌த்‌தி‌ல் இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

தோசை‌ ந‌ன்கு ‌சிவ‌ந்து ‌வருவத‌ற்கு தோசை‌க் க‌ல்‌லி‌ன் சூடு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம். தோசை‌க் க‌ல் சூடாகாம‌ல் மாவை ஊ‌ற்‌றி‌வி‌ட்டா‌ல் தோசை‌க் க‌ல்‌லி‌ல் மாவு ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம்.

தோசை‌க் க‌ல் அ‌திகமாக சூடா‌கி‌வி‌ட்டா‌ல் அத‌ன் ‌மீது த‌ண்‌ணீரை‌த் தெ‌ளி‌த்து ‌பிறகு மாவை ஊ‌ற்றுவது ந‌ல்லது.

தோசை வராம‌ல் ‌ஒ‌ட்டி‌க் கொ‌ண்டா‌ல் தூ‌ள் உ‌ப்பை தோசை‌க் க‌ல் ‌மீது‌த் தூ‌வி வெ‌ங்காய‌த்தை வை‌த்து ‌உ‌ப்பை க‌ல் முழுவது‌ம் பரவலாக‌த் தே‌ய்‌த்து‌வி‌ட்டு ‌பிறகு தோசை சுடலா‌ம்.

மேலு‌ம், தோசை மாவு க‌ல்‌லி‌ல் ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளு‌ம் போது, தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கல்முழுதுவம் அழுத்தி தேய்த்திவிட்டு பிறகு வார்த்தால் நன்றாக வரும்.
 




No comments:

Post a Comment