Monday, April 18, 2011

கோடை‌யி‌ல் ‌அ‌திக கவன‌ம் தேவை

கோடைக்காலங்களில் தயிர் சாதம் புளிப்பு ஏறாமல் இருக்க, சமை‌த்த சாதத்தில் புதிய தயிரை சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரையில் வைக்கவும், 2 நாட்கள் வரையிலும் தயிர் சாதம் புளிக்காது.
வெ‌யி‌ல் காரணமாக பா‌ல் அடி‌க்கடி கெ‌‌ட்டு‌ப் போ‌ய்‌விடு‌ம் எ‌ன்று கூறுவா‌ர்க‌ள். அ‌ப்படி‌‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள், ஒரு பா‌க்கெ‌ட் பா‌லி‌ல் 2 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க ‌விடவு‌ம். 1 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் சு‌ண்டு‌ம் வரை பாலை ந‌ன்கு கொ‌தி‌க்க வை‌த்து இற‌க்கு‌ங்க‌ள். 1 நா‌‌ள் முழு‌க்க கா‌ய்‌ச்சாம‌ல் இரு‌ந்தாலு‌ம் பா‌ல் கெடவே‌க் கெடாது.

தக்காளிகள் சீக்கிரம் கெடாமல் பாதுகாக்க, ஐஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதிகம் பழுத்த தக்காளிகளை அதில் போட்டுவைக்கலாம்.

தோசை மாவு புளித்து விட்டால், சிறிது தண்ணீரை ஊற்றுங்கள் பின்னர் சிறிது நேரம் கழித்து மேலாக தேங்கியிருக்கும் தண்ணீரைக் கொட்டி விட்டால் மாவில் உள்ள புளிப்பு நீங்கி விடும்.
சர்க்கரை டப்பாவை எ‌ங்கு வை‌த்தாலு‌ம் தேடி‌க் கொ‌ண்டு வ‌ந்து ‌விடு‌கிறதா எறு‌ம்புக‌ள். நாலஞ்சு பூண்டுப் பல்லை ச‌ர்‌க்கரை ட‌ப்பா‌வி‌ல் போட்டுவைத்துப் பாருங்கள். எறும்புகள் ஓடியேப் போய்விடும்.

பூ‌ண்டை‌ப் போ‌ட்டு வை‌த்தா‌ல் வாடை வரு‌கிறது எ‌ன்று வரு‌த்த‌ப்ப‌ட்டா‌ல், அ‌தி‌ல் ‌சில ‌கிரா‌ம்புகளை‌ப் போ‌ட்டு வை‌யு‌ங்க‌ள். வாசனையாகவு‌ம் இரு‌க்கு‌ம்.

உருளைக் கிழங்கை தோல் சீவி ஒரே அளவில் கட் பண்ணி. லேசான வெ‌ந்நீரில் கொஞ்சம் உப்பை போட்டு அதில் கிழங்குத் துண்டுகளை 3 நிமிஷம் ஊற வை‌த்து ‌பிறகு ‌நீரை வடி‌த்து‌வி‌ட்டு வறுத்துப் பாருங்க‌ள்.

மிகவு‌ம் மொறுமொறு‌ப்பான உருளை‌க் ‌கிழ‌ங்கு ‌‌சி‌ப்‌ஸ் தயாரா‌கி‌விடு‌ம்.

கோடை‌க் கால‌த்‌தி‌ல் அ‌வ்வ‌ப்போது ‌நீ‌ர்‌த்த‌ன்மை கொ‌ண்ட கா‌ய்க‌றிகளை சால‌ட்டாக செ‌ய்து கொடு‌ப்பது ந‌ல்லது.  
மை‌க்ரோவே‌வ் அவ‌னி‌ல் உணவை சமை‌க்கு‌ம் போது எ‌ந்த உணவை எ‌‌வ்வளவு நேர‌ம் சமை‌ப்பது எ‌ன்று தெ‌ரியாதப‌ட்ச‌த்‌தி‌ல், குறை‌ந்த நேர‌த்‌தி‌ல் சமை‌ப்பது ந‌ல்லது.

உணவை அ‌திக‌ப்படியான நேர‌ம் சமை‌த்தா‌ல் ‌மிகவு‌ம் குழ‌ை‌ந்து போ‌ய்‌விடு‌ம். அ‌ல்லது அ‌திகமான நேர‌ம் வை‌த்‌திரு‌க்கு‌ம் போது ‌தீ‌ய்‌ந்து போகவு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ண்டு. ஏ‌ன் ‌சில உணவு‌‌ப் பொரு‌ட்க‌ள் ‌தீ‌ப்‌பிடி‌த்து எ‌ரியு‌ம் அபாயமு‌ம் உ‌ண்டு.

எனவே, எ‌ந்த உணவாக இரு‌ந்தாலு‌ம் ஒரு அளவான நேர‌த்‌தி‌ல் வை‌த்து சமை‌ப்பது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம். அ‌‌ப்படி ச‌ரியான நேர‌ம் தெ‌ரியாதப‌ட்ச‌த்‌தி‌ல் குறைவான நேர‌த்‌தி‌ல் சமை‌‌‌ப்பது ந‌ல்லது.

ஒரு வேளை சமை‌த்து எடு‌த்தது‌ம், உணவு‌ப் பொரு‌ள் வேகாம‌ல் இரு‌ந்தா‌ல், ஓ‌ரிரு ‌நி‌மிட‌ங்க‌ள் மை‌க்ரோவே‌வ் அவ‌னி‌ல் வை‌த்து எடு‌க்கலா‌ம்.

இதனா‌ல் உணவு ச‌ரியான ரு‌சி‌க்கு வ‌ந்து ‌விடு‌ம். த‌விர, அடு‌த்த முறை சமை‌க்கு‌ம் போது ச‌ரியான நேர‌த்தை ‌நீ‌ங்க‌ள் தெ‌ரி‌ந்து கொ‌ள்ள இயலு‌ம். 
கா‌‌‌ளி‌பிளவ‌ரை வா‌ங்‌கி வ‌ந்து சுடு ‌நீ‌ரி‌ல் ஒரு முறை போ‌ட்டு எடு‌க்கவு‌ம். ‌பிறகு ஒ‌வ்வொரு பூ‌க்களா‌க‌ப் ‌பி‌ரி‌த்து‌ப் பா‌ர்‌த்து நறு‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம். கா‌ளி‌பிளவ‌ரு‌க்கு‌ள் புழு இரு‌ப்பதா‌ல் ‌மிகு‌ந்த கவ‌ன‌த்துட‌ன் சு‌த்த‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.

வெ‌ண்டை‌க்காயை த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு கழு‌வி ஒரு சு‌த்தமான து‌ணியா‌ல் வெ‌ண்டை‌க்காயை துடை‌த்து‌வி‌ட்டு நறு‌க்‌கினா‌ல் கொழுகொழு‌‌ப்பாக மாறாது.

பீ‌ட்ரூ‌ட், கேர‌ட் போ‌ன்றவ‌ற்றை கழு‌விய ‌பிறகு நறு‌க்‌கினா‌ல் ச‌த்து‌க்க‌ள் ‌வீணாவது த‌வி‌ர்‌க்கலா‌ம். எ‌ந்த‌க் காயையு‌ம் நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு கழுவ வே‌ண்டா‌ம்.

வாழை‌த் த‌ண்டு, வாழை‌க்கா‌ய், க‌த்‌தி‌ரி‌க்கா‌ய், உருளை‌க்‌ ‌கிழ‌ங்கு போ‌ன்றவ‌ற்றை நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு வை‌த்தா‌ல் சமை‌க்கு‌ம் வரை கறு‌க்காம‌ல் இரு‌க்கு‌ம்.

பொதுவாக கா‌ய்க‌றிகளை பொடியாக நறு‌க்காம‌ல், ‌ச‌ற்று பெ‌ரிய து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌ சமை‌ப்பது ச‌த்து‌க்க‌ள் ‌‌வீணாவதை‌த் தடு‌க்க உதவு‌ம்.  
மீ‌ன் வறுவ‌ல் எ‌ன்றது‌ம் ‌மீனை மசாலா‌வு‌ட‌ன் சே‌ர்‌த்து வறு‌ப்பது எ‌ன்பது எ‌ல்லோரு‌க்கு‌‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் ‌மீ‌ன் வறுவ‌லி‌ல் எ‌த்தனையோ வகைக‌ள் உ‌ள்ளன.

முத‌லி‌ல் ‌மீனை குழ‌ம்‌பி‌ல் போ‌ட்டு வேக‌வி‌ட்டு ‌பிறகு குழ‌ம்பு ‌‌மீனை தவா‌வி‌ல் போ‌ட்டு, அத‌ன் ‌மீது ‌சி‌றிது குழ‌ம்பை ஊ‌ற்‌றி வறு‌த்து எடு‌ப்பா‌ர்க‌ள். ‌மீ‌ன் வெ‌ந்து‌ம், அதனு‌ள் மசாலா ந‌ன்கு ஊ‌றியு‌ம் இரு‌க்கு‌ம்.

மீனை‌க் கழு‌வி அ‌தனை ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு, ‌மிளகா‌ய் தூ‌ள் மசாலா‌வி‌ல் ஊறவை‌த்து, தவா‌வி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி ‌மீனை வறு‌த்து எடு‌ப்பது.

இ‌திலேயே மசாலா‌க் கலவையுட‌ன் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு, வெ‌ங்காய‌ம் அரை‌த்த ‌விழுதை சே‌ர்‌த்து அ‌தி‌ல் ‌மீனை‌ப் போ‌ட்டு வறு‌ப்பது புது‌வித சுவைய‌ை‌க் கொடு‌க்கு‌ம்.

அடு‌த்தது, ‌மீ‌ன் மசாலா வா‌ங்‌கி வ‌ந்து, அ‌தி‌ல் ‌மீ‌ன் து‌ண்டுகளை‌ப் போ‌ட்டு ஊற வை‌‌க்க வே‌ண்டு‌ம். ‌சி‌றிது எலு‌மி‌ச்சை சாறு‌ம் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். மசாலா‌வி‌ல் ஊ‌றிய ‌மீனை தவா‌வி‌ல் போ‌ட்டு அ‌ல்லது வாண‌‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி பொ‌றி‌த்து‌ம் எடு‌க்கலா‌ம். இது கூடுத‌ல் சுவை அ‌ளி‌க்கு‌ம். 

No comments:

Post a Comment