Monday, April 18, 2011

பொடி செ‌ய்து வை‌க்க வே‌ண்டியவை

சாதாரணமாக ‌வீ‌ட்டி‌லசெ‌ய்யு‌மசமையலை ‌மிஎ‌ளிதாமா‌ற்ற‌ககூடியதநமதகை‌யி‌ல்தா‌னஉ‌ள்ளது. எதையு‌ம் ‌தி‌ட்ட‌மி‌ட்டதெ‌ளிவாசெ‌ய்தா‌ல் ‌விரைவாசமை‌க்கலா‌ம்.பொதுவாக ‌வீ‌ட்டி‌ல் ‌சிபொடிகளை‌ததயா‌ரி‌த்து‌ வை‌த்து‌ககொ‌ள்வே‌ண்டியது ‌மிகவு‌மஅவ‌சிய‌ம்.

அ‌தி‌லரச‌மவை‌க்க‌ததேவையாரச‌பபொடி‌யை ‌தேவையான‌பபொரு‌ட்களவை‌த்தஅரை‌த்தட‌ப்பா‌வி‌லபோ‌ட்டவை‌த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

இதுபோல ‌மிளகு‌பபொடி, சா‌ம்பா‌ரபொடியு‌மஅவ‌சிய‌மஇரு‌க்வே‌ண்டு‌ம்.

சி‌றிஅள‌விலேனு‌மசு‌க்கு‌பபொடி, ஏல‌க்கா‌யபொடி செ‌ய்தவை‌த்து‌ககொ‌ள்ளு‌ங்க‌ள். அவச‌ர‌த்‌தி‌ற்ககொடு‌க்கு‌ம்.

மேலு‌ம், த‌னியா‌பபொடியு‌ம், த‌னியாவையு‌ம், ‌மிளகாயையு‌மஅரைகுரையாஅரை‌த்தவை‌த்து‌ககொ‌ள்வதபு‌ளி சாத‌மசெ‌ய்யவு‌ம், பரு‌ப்புகளவறு‌த்தஅவ‌ற்றஒ‌ன்‌றிர‌ண்டாஉடை‌த்தவை‌த்து‌ககொ‌ள்வது ‌வித‌விதமாசாத‌மசமை‌க்கு‌மபோதசே‌ர்‌த்து‌ககொ‌ள்உதவு‌ம்.

வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

சிவ‌ப்பு ‌நிற‌ம் கொ‌ண்ட பழ‌ங்களை‌க் கொ‌ண்டு தயா‌ரி‌க்கு‌ம் பழ‌ச் ஜா‌ம்க‌ள் உடலு‌க்கு இரு‌ம்பு‌ச் ச‌த்தை அ‌ளி‌க்‌கிறது. ர‌த்த‌த்தை‌ப் பெரு‌க்க உதவு‌கிறது.

வீ‌ட்டி‌ல் தயா‌ரி‌த்த ஜாமை கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டிய‌ி‌ல் வை‌த்து‌ப் பராம‌ரி‌ப்பது ந‌ல்லது. ஒ‌வ்வொரு முறையு‌ம் ஜாமை எடு‌க்க சு‌த்தமான, உல‌ர்வான கர‌ண்டியை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம்.

ஜா‌ம் தயா‌ரி‌ப்பது ‌மிகவு‌ம் எ‌ளிதானது‌ம், செலவு குறைவானது‌ம் கூட, குழ‌ந்தைக‌‌‌ள் இரு‌க்கு‌ம் ‌வீடுக‌ளி‌ல் ‌வீ‌ட்டிலேயே ஜா‌ம் தயா‌ரி‌ப்பது ‌சி‌க்கனமாக இரு‌க்கு‌ம்.

ஜாமை கா‌ற்று‌ப் புகாத பா‌‌ட்டி‌லி‌ல் வை‌த்து பே‌க் செ‌ய்வது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.   
எ‌ந்த உணவையு‌ம் ‌‌‌வீணா‌க்காம‌ல், சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு‌ம் தெ‌‌ரியாம‌ல் எ‌ந்த உணவையு‌ம் பு‌திதா‌க்‌கி ப‌ரிமாறலா‌ம். அது கெ‌ட்டு‌ப் போகாம‌ல் இரு‌க்கு‌ம் வரை.

ரச‌ம் நே‌ற்று இரவு தா‌ன் வை‌த்தது. பழையது எ‌ன்று கா‌ட்டி‌க் கொடு‌க்காம‌ல் இரு‌க்க, வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கடுகு, ‌மிளகா‌ய், க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌த்து ரச‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி ‌விடு‌ங்க‌ள். போது‌ம்.

சமைத்த சாதம் ‌மீதமா‌கி‌வி‌ட்டது. சா‌ப்பா‌ட்டு பா‌த்‌திர‌த்‌தி‌ல் 2 ட‌ம்ள‌ர் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கொ‌தி‌க்க‌வி‌ட்டு எ‌ப்போது‌ம் போல வடி‌த்து ‌விடு‌ங்க‌ள். சாத‌ம் சூடாக இரு‌க்கு‌ம்.

கார‌க் குழ‌ம்பை பு‌திதாகவு‌ம் ரு‌சியாகவு‌ம் மா‌ற்றலா‌ம், இரவு வை‌த்த கார‌க் குழ‌ம்‌பி‌ல் தே‌ங்காயை‌ ம‌சி‌த்து பா‌ல் எடு‌த்து குழ‌ம்‌பி‌ல் ஊ‌ற்‌றி ஒரு கொ‌தி ‌வி‌ட்டு இற‌க்‌கி‌ப் ப‌ரிமாறு‌ங்க‌ள்.

காலை‌யி‌ல் சு‌ட்ட இ‌ட்‌லியை சா‌ப்‌பிட வ‌ே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், சா‌ப்‌பிடு‌ம் போது இ‌ட்‌லி த‌ட்டுக‌ளி‌ல் இ‌ட்‌லியை அடு‌க்‌கி ஒரு 5 ‌நி‌மிட‌ம் வேக ‌வி‌ட்டு இற‌க்‌கி எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். பு‌திய இ‌ட்‌லி போல இரு‌க்கு‌ம். 
தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

சுவை‌க்கே‌ற்ப ப‌ச்சை ‌மிளகா‌ய் அ‌ல்லது கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் பய‌ன்படு‌த்லா‌ம்.

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு, 50 கிராம் வேர்க்கடலை 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.
டீ போடுவது எ‌ன்பது ஒரு ‌விஷயமா எ‌ன்று ‌நினை‌க்க வே‌ண்டா‌ம். அதை ஒரு ‌விஷயமாக மா‌ற்றுவது உ‌ங்க‌ள் கை‌யி‌ல் உ‌ள்ளது.

டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கம்

உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த அ‌ல்லது உ‌ங்களு‌க்கு ஏ‌ற்ற எ‌ந்த ஒரு ‌விஷய‌த்தையு‌ம் ‌நீ‌ங்க‌ள் டீயோடு சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

இ‌ஞ்‌சி, சு‌க்கு, ‌மிளகு, ஏல‌க்கா‌ய், ‌கிரா‌ம்பு, எலு‌மி‌ச்சை என உ‌ங்களு‌க்கு ஏ‌ற்ற சுவைக‌ளி‌ல் டீயை தயா‌ரி‌த்து அரு‌ந்தலா‌ம்.

இவ‌ற்றா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. ‌தினமு‌ம் டீ குடி‌த்து அலு‌த்து ‌வி‌ட்டா‌ல் ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு சுவைக‌ளி‌ல் டீ அரு‌ந்து இதுதா‌ன் வா‌ய்‌ப்பு.

கொ‌த்தும‌ல்‌லி தழை சே‌ர்‌த்து‌ம் டி தயா‌ரி‌க்கலா‌ம். சுவையு‌ம், மணமு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம். 
வெங்காய சூப்பில் சிறிதளவு சீஸை சேர்த்தால் ருசி நன்றாக இருக்கும்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும்.

இறைச்சி மிருதுவாக இருக்க அதனை வினீகரில் சிறிது நேரம் வைத்தால் போதுமானது.

சாம்பார் பொடியை மொத்தமாக அரைத்து வைத்துக் கொண்டு விட்டால் சில நாட்கள் ஆன உடனேயே குணமும் மணமும் குறைந்து விடும். அதனால் கொஞ்சமாக அரைத்து வைத்து ஒரு பாலிதீன் கவரில் போட்டு வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைக்கவேண்டும். இதனால் சாம்பார் பொடி எப்போதுமே வாசனையாக இருக்கும்.

கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக அலம்பி காய வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும். 

No comments:

Post a Comment