Monday, April 18, 2011

சமை‌ப்பது‌ம் ஒரு கலைதா‌ன்

புதினா புலாவ் செய்யும் போது, அரிசியுடன் சமைக்கும் முன், புதினா தளைகளை ஒரு தேக்கரண்டி எண்ணெய் அல்லது வெண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து விட்டு சமைத்தால் புதினா புலாவ் சூப்பர் சுவையுடனும் மனமுடனும் இருக்கும்.பரோட்டாவிற்கு மாவு பிசையும் போது மாவுடன் எண்ணெய்க்கு பதில் நெய்யை சேர்த்தால், பரோட்டா மெதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.

உருளைக்கிழங்கு பொறியல் செய்யும் போது, நறுக்கிய உருளைக்கிழங்கு கலவையுடன் இரண்டு தேக்கரண்டி ரவையை சேர்த்துக் கொள்ளவும். பொறியல் மிருதுவாக இருக்கும்.

பூரிக்கு மாவை உருட்டி அவற்றை மென்மையான துணியால் மூடி வைத்துவிட்டால் அது காய்ந்து போகாமல் இருக்கும். ஒரு மணி நேரம் கழித்து கூட எண்ணெயில் போட்டு பொரித்து கொள்ளலாம்.
காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.

கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.
கறியை விரைவாக சமைக்க, அத்துடன் சிறிதளவு மசித்த பப்பாளியை சேர்க்கவும்.

கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.

பச்சை காய்கறிகள் சமைக்கும்போது மூடிபோட்டு சமைத்தால், சீக்கிரம் சமைக்கலாம். அத்துடன் அவற்றின் சத்தும் வெளியேராது.

வித‌விதமாசாத‌மசெ‌ய்யு‌ம்போதஅ‌‌ரி‌சியகழு‌விய‌பி‌னஅ‌தி‌ல் 2 தே‌க்கர‌ண்டி எ‌ண்ணெ‌யசே‌ர்‌த்தவை‌த்த‌பி‌னவேவை‌க்கவு‌ம். அ‌ரி‌சி ஒ‌ன்றோடஒ‌ன்றஒ‌ட்டாதஉ‌‌தி‌ரியாஇரு‌க்கு‌ம். 

நீங்கள் கட்லட் தயாரிக்கும் போது அதன் மீது தூவுவதற்கு பிரட் தூள்கள் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். அதற்கு பதில் ரவையை தூவுங்கள். அது போதும். கட்லட்டின் மேல்பகுதி மொருமொருப்பாக இருக்கும்.

கறியை சமைப்பதற்கு முன் அதற்குள் உப்பை சேர்த்து விடாதீர்கள். அது கறியில் உள்ள சுவையை ஈர்த்துவிடும்.

ஆனால் மீனை சமைப்பதற்கு முன், மீனுடன் உப்பை சேர்த்து ‌பிறகு கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் வைப்பது நல்லது.

கேக் போன்ற திண்பண்டங்களுக்கு மாவு பிசையும் போது, அதில் சேர்க்கப்படும் பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பழங்களை கொஞ்சம் காய்ந்த மாவிற்குள் முக்கிவிட்டு அப்புறம் சேருங்கள்.

இதனால் கேக்கை பேக் செய்யும் போது, அவை மாவிற்குள் புதைந்து விடாமல் இருக்கும்.




எலுமிச்சை பழங்களை எடுத்து வெ‌ன்‌னீரில் போட்டு விடுங்கள். ஒரு இருபது நிமிடங்கள் கழித்து பிழியுங்கள். அதிகமான சாறு பிழியலாம்.

கேக் அல்லது பிஸ்கட் தயாரிக்கும் போது நாம் அவற்றின் மீது முந்திரி போன்ற பருப்பு வகைகளை தூவுவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பருப்புக்கள் விழுந்து விட்டால் ஏதோ இழந்தது போன்ற ஒரு கவலை ஏற்பட்டுவிடும்.

எனவே, இனிமேல் கேக் அல்லது பிஸ்கட் தயாரிக்கும் போது, முந்திரி அல்லது பிஸ்தா போன்ற பருப்புக்களை பாலில் முக்கிவிட்டு அப்புறம் தூவுங்கள். அவை விழாமல் இருக்கும்.

சீனிப் பாகு தயாரிக்கும் போது ஒரு சில சொட்டுக்கள் எழுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். சினிப் பாகில் இருக்கும் தேவையற்ற கசடுகள் மேலே மிதக்க ஆரம்பித்துவிடும். அவற்றை இறுதியில் நீங்கள் வடிகட்டிக் கொள்ளலாம்.

பஜ்ஜி சுடுவதற்கு முன் அந்த மாவோடு கொஞ்சம் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால பஜ்ஜியும் மொருமொருப்பாக இருக்கும், எண்ணெயும் கொஞ்சமாகத்தான் செலவாகும். 
சாதம் சமைக்கும் போது அரிசியோடு கொஞ்சம் எழுமிச்சை சாறை சேர்க்கவும். அதன் பின் சாதம் வெண்மையாக மாறிவிட்டதைப் பாருங்கள்.

வெங்காயத்தின் சுவை யாருக்காவது பிடிக்கவில்லையென்றால், அதற்கு பதில் முட்டைகோஸை சமையலுடன் சேர்த்துக்கொள்ளவும். இந்த சுவை கண்டிப்பாகப் பிடிக்கும்.

காரட், பட்டாணி, பீட்ரூட் மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை வேகவைக்கும் போது, கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் சுவை மாறாமலே இருக்கும்.

மக்காசோளத்தை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் அந்த நீருடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்த்தால், அதன் மஞ்சள் நிறம் மாறாமல் இருக்கும்.

மக்கா சோளத்தை வேகவைக்கும் போது தண்ணீரில் உப்பை சேர்த்து விடாதீர்கள். அது கடினப்படுத்திவிடும்.  
 

No comments:

Post a Comment