வீட்டில் அடிக்கடி தேநீர் தயாரித்தாலும் சரி, எப்போதாவது தேநீர் தயாரித்தாலும் சரி, அதனை ருசியாகவும், மணமாகவும் செய்ய, இஞ்சி, சுக்கு, மிளகு, கொத்துமல்லி, ஏலக்காய் என ஏதாவது ஒன்றை சேர்த்து தேநீர் தயாரிக்கலாம். ருசி புதுவிதமாக இருக்கும்.
ஏலக்காய் தோலை தேயிலைத் தூளுடன் போட்டு வைத்தால் தேயிலைத் தூள் ஏலக்காய் மணத்துடன் கமகமவென்று இருக்கும்.
முள்ளங்கி வாங்கும்போது அதன் நிறம் நல்ல சிகப்பாக இருக்கும்படியாகப் பார்த்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கிய முள்ளங்கி எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.
மைக்ரோ வேவ் அவனில் எண்ணெயை வைத்துப் பொரிக்கக் கூடாது. ஏனெனில், இதனால் எண்ணெயின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
மைக்ரோ வேவ் அவனில் ஏதேனும் பிரச்சினை என்றால், அதற்கென்று உள்ளவர்களைக் கொண்டு பழுது பார்ப்பதுதான் நல்லது.
வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.
வீட்டிலேயே கேக் செய்யும் போது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்ய தொடங்குங்கள்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.
ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளை பயன்படுத்தக்கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.
கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.
வெங்காயத்தை தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராது.
பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு கெடாமல் இருக்க வேண்டுமா? ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை மிதந்தால் பழைய முட்டை.
கொத்தமல்லியின் மெல்லிய காம்புகள் சூப் அல்லது காய்கறிகளுக்கு ருசியைக் கூட்டும்.
ஊறுகாய்களை பராமரிக்க அகலமான செராமிக் ஜாடிகளை பயன்படுத்தலாம்.
சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும்.
பருப்பை குக்கரில் வைக்கும் முன் சிறிதளவு மஞ்சள் தூளுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.
கேக் தயாரிக்கும்போது சேர்க்க வேண்டிய முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிலிருந்து தனித்தனியாக விழாது.
திராட்சையில் சாறு எடுத்தப் பின்னர் அதன் சக்கையை தூர எறிவார்கள். அவ்வாறு செய்யாமல் திராட்சை சக்கையை ஜாம் தயாரிக்க பயன்படுத்தலாம்.

No comments:
Post a Comment