Monday, April 18, 2011

சமைய‌லி‌ல் மு‌ட்டை

உப்பு ஜாடியிலுள்ள உப்பில் தண்ணீர் சேராமல் காணப்பட வேண்டுமானால், கொஞ்சம் சோள மாவை அந்த ஜாடியில் சேர்த்தால் போதும்.
பாதாம் பருப்பின் தோலை எளிதில் எடுக்க வேண்டுமானால், அவற்றை வெதுவெதுப்பான சூடு காணப்படும் தண்ணீரில் ஒரு நிமிடம் ஊற வைத்த பின் முயற்சிக்கவும்.

பருப்பை வேக வைக்கும்போது சில வெந்தயம் சேர்த்தால், பருப்பு சீக்கிரம் நன்றாக வெந்து ருசியாகவும் காணப்படும். உடலுக்கும் சிறந்தது.

ரொட்டிக்கள் மற்றும் நான்களை முதல் ஒரு முறை பாதி ரோஸ்ட் செய்த பின், விருந்தாளிகளுக்கு அவற்றை பரிமாறும்போது திரும்பவும் நன்றாக சூடாக்கிக்கொள்ளலாம். இதனால் சூடாகவும் ருசியாகவும் சாப்பிடலாம்.

அரை தே‌க்கர‌ண்டி பேக்கிங் சோடாவை சப்பாத்தி பிசையும்போது சேர்த்தால், சப்பாத்தி மிகவும் மென்மையாகவும் மெல்லியதாகவும் காணப்படும்.
பொதுவாக சாத‌ம் வடி‌ப்பது எ‌ன்பது ஒரே ஒரு ‌விஷய‌ம்தா‌ன். ஆனா‌ல் அ‌தி‌ல் எ‌த்தனையோ ப‌க்குவ‌ம் உ‌ள்ளது.

ஒ‌வ்வொரு சாத‌த்‌தி‌ற்கு‌ம் ஒ‌வ்வொரு வகையாக அ‌ரி‌சியை வே‌க வை‌க்க வே‌ண்டு‌ம்.

த‌யி‌ர், ரச‌ம், சா‌ம்பா‌ர் சாத‌ம் செ‌ய்ய அ‌ரி‌சியை லேசாக குழைய ‌வி‌ட்டு வடி‌‌ப்பது சுவையாக இரு‌க்கு‌ம்.

எலு‌மி‌ச்சை, பு‌ளிசாத‌ம், தே‌ங்கா‌ய், மா‌‌ங்கா‌ய் சாத‌ங்க‌ள் செ‌ய்ய அ‌ரி‌சியை மு‌க்கா‌ல் வே‌க்காடு வேக வை‌த்தா‌ல் போதுமானது.

கல‌ந்த சாத‌ம் செ‌ய்யு‌ம் போது அ‌ரி‌சியை ஊற‌வி‌ட்டு ‌அ‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு ‌பிறகு வேக வை‌த்தா‌ல் ஒ‌ட்டாம‌ல், குழையாம‌ல் வரு‌ம்.

பாஸ்மதி அரிசியை வேக வைக்கும்போது ஒன்று அல்லது இரண்டு சொட்டு எலுமிச்சைப்பழ சாரையும் 1/2 டீஸ்பூன் நெய்யையும் சேர்த்தால், அரிசி மிக வெள்ளையாகவும் உடையாமல் முழுசாகவு‌ம், ஒ‌ன்றோடு ஒ‌ன்று ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளாமலு‌ம் வரு‌ம்.  
வேக வைத்த முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க வேண்டுமானால், வேக வைத்த முட்டையை அதன் ஓடுடன் அவ்வாறே குளிர்ந்த தண்ணீருள்ள பாத்திரத்திற்குள் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

முட்டை சேர்ந்த சாலட் அல்லது சூப் வகைகளில் காணப்படும் அந்த முட்டை மணத்தை நீக்க வேண்டுமானால், கொஞ்சம் எலுமிச்சம் பழ சாறை கலந்தால் போதும்.

வேக வைத்த ‌நிறைய முட்டையின் ஓடை உடைக்க வேண்டுமானால், கத்தியின் முனையை சூடாக்கிய பின் அதை உடைக்க முயற்சிக்கவும். எளிதில் வேலை முடியும்.

மு‌ட்டை ஆ‌ம்லெ‌ட் போடு‌ம் போது அ‌திக நேர‌ம் தவா‌வி‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல் ஆ‌ம்லெ‌ட் கடினமா‌கி‌விடு‌ம். ஓரள‌வி‌ற்கு வெ‌ந்து‌வி‌ட்டது எ‌ன்று தெ‌ரி‌ந்தது‌ம் எடு‌த்து ‌விடு‌ங்க‌ள்.

தவா ந‌ன்றாக கா‌ய்‌ந்து அ‌தி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி அதுவு‌ம் கா‌ய்‌ந்த ‌பிறகு மு‌ட்டையை ஊ‌ற்‌றினா‌ல் ந‌ன்கு ‌சிவ‌ந்த, ரு‌சியான ஆ‌ம்லெ‌ட் ‌கிடை‌க்கு‌ம்.  

No comments:

Post a Comment