Monday, April 18, 2011

அசைவ சமையலு‌க்கான கு‌றி‌ப்புக‌ள்

நிறைய டிஷ்ஷூக்கு வெங்காயம் தேவைப்படும். தீடிரென செய்ய வேண்டும் என்றால், வெங்காயத்தை நறுக்குவது பெரும்பாடாக இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆப்பிள், வெள்ளரிக்காயின் தோல்களை தூக்கி எறியாமல், சாலட்டை அலங்கரிக்கும் போது, அவற்றை பயன்படுத்துங்கள். பார்க்க மிக மிக அழகாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆப்பிளின் தோலில் எவ்வளவு சத்து இருக்கிறது. அ‌வ்வளவு‌ம் ‌வீணாவதை‌த் தடு‌க்கலாமே.

ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதை சமையலறையில் காயவிடுங்கள. எல்லாவிதமான சமையல் வாசனைகளையும் அது உறிஞ்சிக்கொண்டுவிடும். சமையலயறை பு‌‌திதாக இருக்கும.

பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள். ஓரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக சீவிக் கொள்ளுங்கள். வில்லைகளை பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து அதன் மேல் அரிசியை போடுங்கள். பிரியாணியும் அடிபிடிக்காது. உருளை வில்லைகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.

ரொ‌ட்டியை வா‌ங்கு‌ம் போது அ‌திகமாக ‌வி‌ற்பனையாகு‌ம் கடை‌யி‌ல் இரு‌ந்து ம‌ட்டு‌ம் வா‌ங்க‌வு‌ம். அதே‌ப் போல ரொ‌ட்டியை வா‌ங்‌கி அ‌திக நா‌ட்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டா‌ம்.

கே‌க், பே‌க்க‌ரி ரொ‌ட்டி போ‌‌ன்றவை 1 வார‌த்‌தி‌ற்கு‌ள் மே‌ல் ஆ‌கி‌வி‌ட்டா‌ல் யோ‌சி‌க்கா‌ல் தூ‌க்‌கி எ‌றி‌ந்து ‌விடு‌ங்க‌ள்.

சான்விட்ச் செய்யும்போது பிரட் ஓரங்களை வெ‌ட்டி தூக்கி எறி‌ந்து ‌விட வே‌ண்டா‌ம். அவற்றை சின்ன சின்னதாக வெ‌ட்டி நல்லா பொரிச்சு எடுத்துக்குங்க. இதை சூப்பிலோ அல்லது சாலடிலோ சேருங்கள். ஜோரா இருக்கும்.

ரொ‌ட்டி ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல் அதனை உ‌தி‌ர்‌த்து வெ‌யி‌லி‌ல் காயவை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். க‌ட்ல‌ட் செ‌ய்யு‌ம் போது பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளலா‌ம்.

ரொட்டிகளை புதுமையாக வைத்துக் கொள்ள அதனுடன் சில வெளிறிய தண்டுகளை சேர்த்து ப்ளா‌ஸ்டிக் பையில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.  

கையில் எண் ணெய் தடவிக் கொண்டு மீன் சுத்தம் செய்தால், கையில் வாடை இல்லாமல் இருக்கும். அல்லது சுத்தம் செய்த பிறகாவது, கையில் எண்ணெய் தடவ வேண்டும்.

இறாலை உரித்துக் கழுவியதும் சிறிது நேரம் மோரில் ஊறவிட்டால், வாடை மிகவும் குறைந்து விடும். சுவையும் கூடுதலாக இருக்கும்.

இறால் நாலு நிமிடம் வெந்தால் போதும். அதற்கு மேல் வெந்தால், ரப்பரைப் போல் அழுத்தமாகி விடும். இறால் வாயு அதிகம் உற்பத்தி செய்யும். எனவே, இறால் சமைக்கும் போது, இஞ்சியும் பூண்டும் அதிகம் சேர்க்க வேண்டும்.

கோழியின் தோல் பகுதிக்கு அடியில், அதிக கொழுப்பு படிந்துள்ளது. எனவே, கோழி சமைக்கும் போது, அதிக கொழுப்புள்ள எண்ணெய், நெய் ஆகியவை சேர்த்து தயாரிக்கக் கூடாது.

கொழு‌ப்பு ‌நிறை‌ந்த பொரு‌ட்களை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுபவ‌ர்க‌ள், கோ‌ழி‌யி‌ன் தோலை ‌நீ‌க்‌கி‌வி‌ட்டு இறை‌ச்‌சியை ம‌ட்டு‌ம் சமை‌த்து உ‌‌ண்ணலா‌ம். 
முட்டையை வா‌ங்‌‌கி வரு‌ம் போதோ அ‌ல்லது சமை‌க்கு‌ம் போதோ சமையலறை‌யி‌ல் உடைந்து தரையில் கொட்டி விட்டால், அந்த இடத்தில் சிறிது உப்பை தூவுங்கள். நாற்றம் இருக்காது.

முட்டையை அடித்து ஆம்லெட் போடும்போது, சிறிது பால் கலந்து ஊற்றினால், ஆம்லெட் மென்மையாக இருக்கும்.

மீனை சுத்தம் செய்வதற்கு முன், சிறிது நேரம், உப்பை போட்டு கிளறி வைக்கவும். இப்படி செய்வதால், மீனிலிருந்து வாடை வராது.

மீனில் ஒமீகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது தரமான கொழுப்பு. ஆகையால், மீன் உணவை எந்த வயதினரும் உண்ணலாம். ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த மீன் உணவை முள்நீக்கி மசித்துக் கொடுக்கலாம்.

மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை சாறு கலவையில், மீன் துண்டுகளைப் போட்டு வைத்தால், அதிக வாடை வராது.

No comments:

Post a Comment