கத்தரிக்காயை நறுக்கிய பின் சிறிது நேரம் கழித்தும் அதன் நிறம் மாறாமலிருக்க, அதன் வெட்டுப்பகுதிகளில் எல்லாம் உப்பு தண்ணீரை தெளிக்கவும்.
நறுக்கிய ஆப்பிள்கள் நிறம் மாறாமல் நீண்ட நேரம் காணப்பட வேண்டுமானால், குளிர்ந்த உப்பு தண்ணீரில் அவற்றை நனைத்து டவலில் துவட்டி எடுத்து வைத்தால் நீண்ட நேரம் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்.
உருளைக்கிழங்கு ஆவியில் வைப்பதற்கு முன்பு சிறிது வினிகரை அந்தத் தண்ணீரில் சேர்த்தால், கிழங்கு சீக்கிரமாக நன்றாக வெந்துக் காணப்படும்.
வெண்டைக்காயை சமைக்கும் போது பாத்திரத்துடன் ஒட்டிக்கொள்ளாமல் காணப்பட, சிறிதளவு தயிரை சேர்த்துக்கொள்ளவும்.
ஃகாலிபிளவர், முட்டைகோஸ் முதலியவற்றை வேக வைக்கும்போது ஒரு வித நாற்றம் வரும். அதைத் தடுக்க சிறிது எலுமிச்சம் பழச்சாறு, அல்லது ஒரு சிறிய இஞ்சித் துண்டை சேர்த்து வேகவைக்கலாம்.
குழம்பு வகைகளை எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல் சில சமயங்களில் சில புதுமைகளைப் புகுத்திப் பாருங்கள்.
இட்லி, தோசைகளுக்கு வைக்கும் சில வகை குழம்புகளில் வெங்காயம், தக்காளியை வதக்கிப் போடாமல் சிறிது அரைத்து சேருங்கள். குழம்பு ருசியாகவும், தொக்காகவும் இருக்கும்.
சைவ மற்றும் அசைவ குழம்பு வகைகளை செய்யும்போது அதன் ருசியை அதிகரிக்க வேண்டுமானால், சிறிதளவு பார்லி பவுடரை சேர்க்கலாம்.
குழம்பில் அதிகமாக உப்பை சேர்த்துவிட்டேனே என்ற கவலை இனி வேண்டாம். அந்தக் குழம்பில் ஒரு பச்சை உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி குழம்பில் போட்டு 15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். அந்த உருளைக்கிழங்குகள் உப்பை எடுத்துவிடும். அந்த உருளைக்கிழங்குகளை பரிமாறும்போது நீக்கிவிடலாம்.
வெங்காயமும் பூண்டும் சேர்க்கப்படாத குருமாக்கள், குழம்புகள், பருப்புகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
பக்கோடா அல்லது வறுவல் வகைகளை சமையல் செய்யும் போது, அவற்றை வறுக்கும் எண்ணெய்யில் கொஞ்சம் உப்பையும் சேர்த்து வறுத்தால், குறைவான எண்ணெய் மட்டுமே செலவாகும்.
மொருமொருப்பான அதிகம் எண்ணெய் இல்லாத பஜ்ஜிக்களை தயாரிக்க வேண்டுமானால், சிறிதளவு அரிசி மாவையும் அதன் கலவையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
மொரு மொருப்பான உருளைக்கிழங்கு அல்லது வாழைப்பழ சிப்ஸ் செய்ய வேண்டுமானால், அவற்றை பொரிப்பதற்கு முன் உப்பு தண்ணீரை தெளிக்கவும்.
மீன்களை எண்ணெயில் பொறிக்கும்போது அதன் வாசனை அடுத்தடுத்த வீடுகளுக்கும் செல்லும். அடுத்த வீட்டுக்காரர்கள் சைவம் என்றால் அவர்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். இதைத் தவிர்க்க மீன்களைப் பொறிக்கும் பொழுது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்துக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment