Tuesday, April 19, 2011

சமை‌க்கு‌ம் போது கவ‌னி‌க்க

இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றை பயன் படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.
பழம், பழ‌ச்சால‌ட், பழ‌ச்சாறு ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

தேனீர் தயாரித்து அனைவருக்கும் கொடுக்கும் முன்பு ஒரு துண்டு ஆரஞ்சுப் பழத்தோலை போட்டு சில நிமிடம் கழித்து எடுத்து விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும்.

பூசணி, பரங்கி கொட்டைகளை வெயிலில் உலர்த்தி பத்திரப்படுத்தி இனிப்புகள் தயாரிக்கும்போது பயன் படுத்தலாம் அவற்றை வறுத்தும் உட்கொள்ளலாம்.
கொத்த மல்லி இலைகளை நன்றாக ஆய்ந்து சுத்தமாக அலம்பி காய வைத்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்தால் நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

கோழி‌க் க‌றியை நறு‌க்குவத‌ற்கு முன் சிறிதளவு மஞ்சள் பொடியை தடவி 10 நிமிடம் கழித்து நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் ஒரு வகை துர் நாற்றம் இருக்காது.

கேக் தயாரிக்கும்போது சேர்க்க வேண்டிய முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிலிருந்து தனித்தனியாக விழாது.

சமைக்கும் போது கடுகு ஏலக்காய், சீரகம் கிராம்பு போன்ற மசாலா சாமாங்களை தேவைக்கேற்ப பயன் படுத்துங்கள், அதிகமாக பயன்படுத்தினால் அவற்றின் சுவைதான் கூடுதலாக தெரியும்.  
இஞ்சி, பூண்டு சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன் படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

பன்னீரை நீண்ட நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் அது கடினமாக மாறி விடும் இதை மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.

காய்ந்த பழங்களை பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

சமைக்கும் போது காய்கறிகள் அதன் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும்.

பழங்களை நறுக்கிய பிறகு அதில் பழுப்பு ஏறாமல் இருக்க அன்னாசி அல்லது எலுமிச்சை சாற்றில் நனைத்து பிறகு பராமரிக்கவும்.

சப்பாத்திகள் மென்மையாக இருக்க அதன் மாவை வென்னீரில் பிசையவும்.  

No comments:

Post a Comment