Tuesday, April 19, 2011

பிரியாணி அடிபிடிக்காமல் இருக்க

பிரியாணி செய்யும் பாத்திரத்தின் அடியில் நெய் தடவிக் கொள்ளுங்கள். ஓரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு, மெல்லிய வில்லைகளாக சீவிக் கொள்ளுங்கள். வில்லைகளை பாத்திரத்தின் அடியில் அடுக்கி வைத்து அதன் மேல் அரிசியை போடுங்கள். பிரியாணியும் அடிபிடிக்காது. உருளை வில்லைகளும் சாப்பிட சுவையாக இருக்கும்.
பிரிட்ஜில் வாழைப்பழத்தை அப்படியே வைத்தால் கறுப்பாகிவிடும. ஒரு கறுப்பு பைக்குள் போட்டு வைத்தால் பழம் கறுக்காமல் மஞ்சளாகவே இருக்கும்.

எலுமிச்சையிலிருந்து சொட்டு விடாமல் பிழிந்தெடுக்க, எலு‌மி‌ச்சை பழத்தை 10 நொடிகள் மைக்ரோவேவில் வைத்துப் பிறகு பிழிந்து பாருங்களேன். எ‌வ்வளவு சாறு வரு‌கிறது எ‌ன்று..

சர்க்கரை டப்பாவில் ஒரே எறும்பாக இருக்கிறதா ? நாலஞ்சு பூண்டுப் பல்லை அதில் போட்டுவைத்துப் பாருங்கள். எறும்புகள் ஓடியேப் போய்விடும்.

பூ‌ண்டை ‌விரு‌ம்பாதவ‌ர்க‌ள் ‌சில ‌கிரா‌ம்புகளை‌ப் போ‌ட்டு வை‌த்தா‌ல் போது‌ம்.
சமைய‌ல் எ‌ரிவாயுவை ‌மி‌ச்ச‌ம் ‌பிடி‌ப்பதா‌ல் மாச‌க் கடை‌‌சி‌யி‌ல் எ‌ரிபொரு‌ள் ‌தீ‌ர்‌ந்து‌வி‌ட்டதே எ‌ன்று புல‌ம்ப வே‌ண்டி வராது.

சமையலுக்கு கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் முன் தேவையான பொருட்களை முன்னமே எடுத்து வைத்துக் கொள்ளவும் இதனால் எரிபொருள் வேஸ்ட் ஆவதைத் தவிர்க்க முடியும்.

காய்கறிகளை சமைக்கும் போது சீக்கிரம் ஆக வேண்டும் என்பதற்காக அடுப்பை பெரிதாக எரிய விடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள சத்துகள் குறைந்து விடும், குக்கரில் சமைத்தால் அதன் சத்து பாதுகாக்கப்படும்.

அடி‌க்கடி உபயோக‌ப்படு‌த்து‌ம் ப‌ர்ன‌ர் ‌சி‌றிய ப‌ர்னராக இரு‌க்க வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

வேக வை‌க்கு‌ம் பொரு‌ட்களை ‌சி‌றிது நேர‌ம் ஊறவை‌த்து‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல் வேகு‌ம் நேர‌ம் ‌மி‌ச்சமாகு‌ம்.
நிறைய டிஷ்ஷூக்கு வெங்காயம் தேவைப்படும். தீடிரென செய்ய வேண்டும் என்றால், வெங்காயத்தை நறுக்குவது பெரும்பாடாக இருக்கும். அதனால் நேரம் கிடைக்கும் போது வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் போது இன்ஸ்டன்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆப்பிள், வெள்ளரிக்காயின் தோல்களை தூக்கி எறியாமல், சாலட்டை அலங்கரிக்கும் போது, அவற்றை பயன்படுத்துங்கள். பார்க்க மிக மிக அழகாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஆப்பிளின் தோலில் எவ்வளவு சத்து இருக்கிறது தெரியுமா?

கோடைக்காலங்களில் தயிர் சாதம் புளிப்பு ஏறாமல் இருக்க, சமையல் சாதத்தில் புதிதான தயிரை சேர்த்து, குக்கரில் ஒரு விசில் வரும் வரையில் வைக்கவும், 2 நாட்கள் வரையிலும் தயிர் சாதம் புளிக்காது.

பாலாடை அல்லது சீஸ் உருகாமலும் கெடாமலும் இருக்க வினீகரில் நனைத்த துணியில் சீஸை சுற்றி அதனை நன்கு இறுக மூடிய பாத்திரத்தில் வைக்கவும்.
சமோசாக்கள் தயாரிக்கும்போது கோதுமை மாவுடன் அல்லது மைதா மாவுடன் அரிசி மாவைச் சேர்‌த்தா‌ல் மொறுமொறு‌ப்பான சமோசா‌க் ‌கிடை‌க்கு‌ம்.

ஒரு டவலை தண்ணீரில் நனைத்து அதை சமையலறையில் காயவிடுங்கள. எல்லாவிதமான சமையல் வாசனைகளையும் அது உறிஞ்சிக் கொண்டுவிடும். சமையலயறை‌யி‌ல் எ‌ந்த வாசனையு‌ம் த‌ங்காது.

ஆம்லெட்டுக்கு முட்டை அடிக்கும்போது, கொஞ்சம் பாலை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆம்லெட் மெத்து மெத்தென்று இருக்கும்.

கோதுமை மாவை அரை‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ஒரு கை‌ப்‌பிடி சோயா வா‌ங்‌கி சே‌ர்‌த்து அரை‌த்தா‌ல் ச‌ப்பா‌த்‌தி ‌மிருதுவாக இரு‌க்கு‌ம். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

சாத‌ம் வடி‌க்கு‌ம் போது அ‌தி‌ல் ‌சி‌றிது உ‌ப்பு சே‌ர்‌த்து வடியு‌ங்க‌ள். எ‌வ்வளவுதா‌ன் குழ‌ம்‌பி‌ல் உ‌ப்பு போ‌ட்டாலு‌ம் சாத‌த்‌தி‌ல் உ‌ப்பு இரு‌ந்தா‌ல் அத‌ன் ரு‌சியே த‌னிதா‌ன்.  

No comments:

Post a Comment