நாம் வாங்கும் மளிகைப் பொருட்கள் எடை சரியானதாக இருக்கிறதா, விலைப் பட்டியலில் விலை சரியாகப் பதிவு செய்யப்பட்டு நம்மிடம் சரியான பணம் வாங்கப்பட்டுள்ளதா என்பதை பொதுவாக எல்லோரும் கவனிப்பார்கள்.
ஆனால் பலரும் கவனிக்காத விஷயம், நாம் வாங்கியப் பொருள் சரியானதா, தரமானதா, கலப்படம் இல்லாததா, உரிமம் பெற்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதா அல்லது போலி பெயர்களின் உருவானதா என்பதைத்தான்.நாம் வாங்கும் கடுகில் இருந்து பட்டுப் புடவை முதல் தங்கம் வரை எல்லாவற்றிலும் கலப்படம் இருக்க வாய்ப்புண்டு.
முதலில் கடுகில் செய்யப்படும் சாதாரண கலப்படம் என்னவென்றால், கடுகுடன் கேழ்வரகைக் கலந்து விற்பனை செய்வது.
இதில் கடுகுடன் ஆர்ஜிமோன் கலப்படம்தான் மோசமானது. இப்படி கலப்படம் செய்த பொருட்களை உட்கொள்ளும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
எனவே வாங்கும் பொருளும் தரமானதாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து வாங்க வேண்டியது உங்களது கடமைதான்.
No comments:
Post a Comment