Monday, April 18, 2011

சமையலு‌க்கு மு‌க்‌கிய‌த்துவ‌ம்

பொதுவாக ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பெ‌ண்க‌ள் காலை‌யி‌ல் எழு‌ந்தது‌ம் காலை உணவையு‌ம், ம‌திய உணவையு‌ம் தயா‌ரி‌த்து ‌விட வே‌ண்டு‌ம். இதனா‌ல் ஒரு நாளை‌க்கான மு‌‌க்‌கிய வேலைக‌ளி‌ல் பா‌தி வேலை முடி‌ந்து ‌விடு‌ம்.
அடு‌த்த நாளை‌க்கு‌ செ‌ய்ய வே‌ண்டியத‌ற்கான உணவு‌ப் பொரு‌ட்களை மு‌ந்தைய நா‌ள் இரவே வா‌ங்‌கி வ‌ந்தோ அ‌ல்லது கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டி‌யி‌ல் இரு‌ப்பதை உறு‌தி செ‌‌ய்து கொ‌ள்ள வே‌‌ண்டு‌ம்.

காலை‌யி‌ல் காலை உணவுட‌ன் சே‌ர்‌த்து ம‌திய உணவை சமை‌ப்பதா‌ல் நேர‌ம் வெகுவாக ‌மி‌ச்சமாகு‌ம்.

உணவு வேலை முடி‌ந்தது‌ம், ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் ம‌ற்ற வேலைகளை எ‌ளிதாக செ‌‌ய்து முடி‌த்து ‌விடலா‌ம். மேலு‌ம், ம‌திய நேர‌த்‌தி‌ல் வெ‌யி‌ல் சமய‌த்‌தி‌ல் சமையலறை‌யி‌ல் ‌கிட‌ந்து க‌ஷ‌்ட‌ப்பட வே‌ண்டா‌ம்.

பெரு‌ம்பாலு‌ம் பெ‌ண்க‌ள் காலை உணவு வேலை முடி‌ந்த ‌பிறகுதா‌‌ன் கா‌ய்க‌றி‌க் கடை‌க்கு‌ச் செ‌ன்று கா‌ய்க‌றி வா‌ங்‌கி வ‌ந்து சமை‌க்க‌த் துவ‌ங்கு‌கி‌ன்றன‌ர். இதனா‌ல் அ‌ந்த நா‌ள் முழு‌க்க சமைய‌ல் செ‌ய்‌வ‌திலேயே க‌ழி‌ந்து ‌விடு‌கிறது. இதை மா‌ற்‌றினா‌ல் உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கையு‌ம் மாறு‌ம்.

No comments:

Post a Comment