Tuesday, April 19, 2011

முட்டையை வேக வைக்கும்போது...

முட்டைகளை வேக வைக்கும் போது, அவை உடையாமல் இருக்க ஒரு எளிய வழி. 2 தேக்கரண்டி புளிக்காடியை (வினிகர்) வேகவைக்கும் தண்ணீரில் சேர்க்கவும். இது முட்டை ஓடு உடைவதை தடுக்கும்.
மு‌ட்டையை வேக வை‌ப்பத‌ற்கு மு‌ன்பு சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் ஒரு முறை அல‌சி‌வி‌ட்டு எடு‌‌த்தா‌ல் ந‌ல்லது. அலச வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் லேசாக த‌ண்‌ணீ‌ரி‌ல் கழுவ வே‌ண்டு‌ம். அழு‌த்‌தி ‌கழு‌வி ‌விட வே‌ண்டா‌ம்.

மு‌ட்டைகளை அ‌திகப‌ட்சமாக 10 ‌நி‌மிட‌த்‌தி‌ற்கு மே‌ல் வேக வை‌க்க‌க் கூடாது. மு‌ட்டை‌யி‌ன் வெ‌ள்‌ளை‌க் கரு எ‌ளி‌தி‌ல் ‌ஜீரணமாகு‌ம் எ‌ன்பதா‌ல் அதை ம‌ட்டு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு‌க் கொடு‌க்கலா‌ம்.

சூடான உணவு‌ப் பொருளுட‌ன் அ‌வி‌த்த மு‌ட்டையை‌ப் போ‌ட்டு வை‌த்தா‌ல், மு‌ட்டை‌யி‌ன் ம‌ஞ்ச‌ள் கரு ‌மீது கருமை ‌நிற‌ம் பட‌ர்‌ந்து‌விடு‌ம் எனவே உணவு‌ப் ப‌ரிமாறு‌ம் போது ம‌ட்டு‌ம் மு‌ட்டையை உணவு‌ப் பொருளோடு சே‌ர்‌த்து வையு‌ங்க‌ள்.

மு‌ட்டையை ‌மிளகு‌த் தூ‌ள் சே‌ர்‌த்து சமை‌ப்பது ஆரோ‌க்‌கியமான உணவாக இரு‌க்கு‌ம். 

பூண்டை சுலபமாக உரிக்க சூப்பரான வழி ஒன்று இருக்கிறது. பூண்டை மைக்ரோவேவில் ஓரு 10 விநாடிகள் வைத்து எடுத்து, ஆறவைத்து பிறகு உரித்துப்பாருங்கள. தோல் எளிதில் கழன்று வரும்.

தேங்காய் மூடியை பிரிட்ஜின் ப்ரீசரில் 3 மணி நேரம் வைத்து பிறகு எடுத்து துருவுங்கள். சிரமமில்லாமல் சர சரவென்று துருவிவிடலாம்.

சூ‌ப்பில் உப்பு அதிகமாகிவிட்டதா ? கைவசம் உருளைக்கிழங்கு இருக்கிறதா ? அதை சின்ன சின்ன துண்டுகளாக்கி சூப்பில் போடுங்கள. உப்பு கரிப்பு மாயமாய் மறைந்துவிடும்.

கீரையை சமைத்த பிறகும் அது பச்சைப் பசேலென்று இருக்க வேண்டுமா ? ஓரு ஸ்பூன் சர்க்கரையை சேருங்கள. சத்தும் போகாது. நிறமும் மாறாது.   
ஓவனில் அசைவ சா‌ப்பாடு சமை‌த்த ‌பிறகு சைவ சமைய‌ல் செ‌ய்யு‌ம் போது மனது யோ‌சி‌க்‌கிறதா? அ‌ல்லது ஓவ‌னி‌ல் இரு‌ந்து ஒரு மாதிரியாக வாடை வருகிறதா?

எ‌ளிதான வ‌ழிக‌ள் உ‌ள்ளன.

ஒரு பாத்திரத்தில் இளஞ் சூடான வென்‌‌னீரை எடுத்து அதில், பயன்படுத்திய டீ இலைகள் அ‌ல்லது டீ பேக்‌ஸ், கொஞ்சம் வினிகர், துளி எலுமிச்சை சாறு எல்லாம் சேருங்கள். இதை 5 நிமிஷம் ஓவனில் வைத்துப் பாருங்கள். வாசனையா‌ல் ஓவனே மணமணக்கும்.

வெறு‌ம் எலு‌மி‌ச்சை சாறையு‌ம் வை‌த்து இ‌‌வ்வாறு செ‌ய்யலா‌ம். அதனா‌ல் ஓவ‌னி‌‌ல் அடி‌க்கு‌ம் வாடை ‌நி‌ச்சயமாக குறையு‌ம்.

ஓவனை முறையாக‌ப் பராம‌ரி‌த்து வ‌ந்தா‌ல் ஓவ‌னி‌ல் எ‌ந்த வாடையு‌ம் ‌நிலை‌க்காது எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளவு‌ம். 
இட்லி மாவை தண்ணியா அரைச்சிட்டீங்களா? கவலையை விடுங்க. கொஞ்சம் சோள மாவு, கொஞ்சம் பிரட் துணுக்குகள். இரண்டையும் மாவில் சேருங்க. மாவு கெ‌ட்டியாகு‌ம். இ‌ட்‌லி சுவையாகு‌ம்.

சான்விட்ச் செய்யும்போது பிரட் ஓரங்களை தூக்கி எறிஞ்சிடாதீங்க. அவற்றை சின்ன சின்னதா கட் பண்ணி நல்லா பொரிச்சு எடுத்துக்குங்க. இதை சூப்பிலோ அல்லது சாலடிலோ சேருங்கள். ‌வி‌த்‌தியாசமாக இரு‌க்கு‌ம்.

கடை‌யி‌ல் செ‌ய்வது போ‌ல் மொறுமொறு‌ப்பான உருளை‌க்‌கிழ‌ங்கு செ‌ய்ய ‌விரு‌ம்பு‌கி‌றீ‌ர்களா அ‌ப்படியானா‌‌ல்..

உருளைக் கிழங்கை தோல் சீவி ஒரே அளவில் கட் பண்ணிக்குங்க. லேசான வென்‌‌னீரில் கொஞ்சம் உப்பை போட்டு அதில் கிழங்குத் துண்டுகளை 3 நிமிஷம் ஊறவையுங்க. அப்புறம் தண்ணியை வடிச்சிட்டு கிழங்கை வறுத்துப் பாருங்க.

மொறுமொறு‌ப்பான உருளை‌க்‌கிழ‌ங்கு வறுவ‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌ம் எ‌ன்று தெ‌ரியு‌ம் 

No comments:

Post a Comment