Tuesday, April 19, 2011

நறு‌க்கென நாலு ‌விஷய‌ம்

சாதம் வடிக்கும் போது அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் வெண்மையாகவும், சாதம் உதிரி உதிரியாகவும் இருக்கும்.
பன்னீரை நீண்ட நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் அது கடினமாக மாறி விடும் இதை மீண்டும் மிருதுவாக மாற்ற சிறிது நேரம் வென்னீரில் வைக்கலாம்.

சமைக்கும் போது காய்கறிகள் அதன் நிறத்தையும் மணத்தையும் இழக்காமல் இருக்க திறந்து வைத்து சமைக்கவும்.

பழங்களை நறுக்கிய பிறகு அதில் பழுப்பு ஏறாமல் இருக்க அன்னாசி அல்லது எலுமிச்சை சாற்றில் நனைத்து பிறகு பராமரிக்கவும்.

ஆம்லேட்டுகள் நன்றாகவும் ருசியுடனும் இருக்க முட்டையை உடைத்து ஊற்றியவுடன் சிறிது பாலையும் உளுத்தம்மாவையும் அதனுடன் சேர்த்து ஆம்லேட் தயாரிக்கவும். 
வெங்காயம் வதக்கும்போது நல்ல பொன்னிறமாக ஆகவும், எளிதில் ஜீரணமாகவும் அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து விடுங்கள்.

பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது.

எலுமிச்சை, சாத்துக்குடி ஆகிய பழங்களை சிறிது நேரம் வென்னீரில் போட்டு வைத்த்து பின்னர் பிழிந்தால் நிறைய சாறு வரும்.

வீட்டிலேயே பிஸ்கட் தயாரிப்பவர்கள் பிஸ்கட் மாவில் தண்ணீர் அதிகமாகி விட்டால் அதற்காக வருந்த வேண்டாம், மாவை சிறிது நேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைத்துவிட்டால் மாவு நன்கு கெட்டியாகி விடும், பிஸ்கட்களும் மொறு மொறுவென இருக்கும்.

எந்த ஒரு மாவை பிசைந்த பிறகும் அதன் மீது ஈரமான பருத்தி துணியை மூடிவைத்தால் மாவு காயாமல் இருக்கும். 
கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

தண்ணீரில் சிறிதளவு வினீகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

தோசை மாவு புளித்து விட்டால், சிறிது தண்ணீரை ஊற்றுங்கள் பின்னர் சிறிது நேரம் கழித்து மேலாக தேங்கியிருக்கும் தண்ணீரைக் கொட்டி விட்டால் மாவில் உள்ள புளிப்பு நீங்கி விடும்.

உருளைக்கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்ககூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
காய்கறிகளில் உப்பு அதிகமாக சேர்த்து விட்டால், கோதுமை மாவை உருட்டி அதில் தோய்த்து எடுக்கவும், அதேபோல் எதோ ஒன்றில் காரம் அதிகமாக சேர்த்துவிட்டால் காரத்தை குறைக்க எலுமிச்சை சாற்றை சில சொட்டுகள் விடவும்.

சமைக்கப்படாத பச்சை இறைச்சியை மிருதுவாக்க எலுமிச்சையை தேய்க்கலாம் அல்லது வாழையிலையில் சுற்றி வைக்கலாம்.

தக்காளிகள் சீக்கிரம் கெடாமல் பாதுகாக்க, ஐஸ் தண்ணீரில் சிறிதளவு உப்பை சேர்த்து அதிகம் பழுத்த தக்காளிகளை அதில் போட்டுவைக்கலாம்.

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

காய்ந்த பழங்களை பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.
ஆப்பிளை நறுக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் ஆப்பிள் கறுப்பாகாமல் இருக்கும்.

காய்கறிகளை கொதிக்க வைக்கும் நீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்தால் காய்கறிகளின் நிறம் குறைவதை தடுக்கலாம், வேர்க் காய்கறிகளை மூடிய பாத்திரங்களில் அடுப்பை சிறிதாக வைத்தும், பச்சைக் காய்கறிகளை திறந்த பாத்திரங்களிலும் சமைக்க வேண்டும்.

எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை தட்டில் போடும் முன் வடிகட்டி அல்லது உறிஞ்சு தாளில் வைக்கவும்.

பஜ்ஜி மாவில் சிறிதளவு அரிசிமாவை கலந்தால் மொறுமொறுப்பு கொடுப்பதுடன் எண்ணெய் பசையையும் குறைக்கலாம்.

பாகற்காய் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க அதனை நறுக்கி சிறிதளவு உப்பு சேர்த்து எவர் சில்வர் பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். 
மென்மையான காய்கறிகளை தோலுடன் சமைக்கவும். காய்கறியை நெய்யில் வறுக்க வேண்டுமென்றால் காரம் அதிகமாக சேர்க்க வேண்டாம். போதுமான அளவுக்கு வறுத்தால் நலம். ஏனெனில் சத்துகள் வற்றாமல் இருக்கும்.

எலுமிச்சையிலிருந்து சாறை எடுக்கும் முன் அதனை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தால் சாறு அதிகமாக வரும்.

முட்டையை அதிக நேரம் கொதிக்க வைத்து விட்டால் உரிக்கும் முன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் வைக்கவும்.

பாலில் தயாரிக்கும் உணவுகளுடன் பழச் சாற்றை சேர்க்க வேண்டுமானால், சாறை துளித் துளியாக சேர்த்தால் பால் திரியாமல் இருப்பதோடு ருசியும் கூடும்.

அடை, தோசை போன்ற மாவு தயாரிப்புகளில் நெய் சேர்க்க வேண்டுமானால், உணவு‌ப் பொரு‌ள் ஆறியவுடன் சேர்க்கவும்.


 

No comments:

Post a Comment