மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா... பிரச்சனை மோர் தயிரில் இல்லைங்க. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் வைத்தீர்களானால் சீக்கிரம் புளிக்காது.
முருங்கைப்பூ, இலைகளை சாத வகைகள், சைவ அயிட்டங்கள் போன்றவை செய்யும் போது அலங்கரிக்க பயன்படுத்திப்பாருங்கள். அதே போல் காய்கறிகளை சூப்புக்காக வேக வைக்கும் போது அதனுடன் இதனையும் சேர்த்து வேக வைத்துப் பாருங்கள், வித்தியாசமான மணத்துடன் சூப்பராக இருக்கும். உடலுக்கும் நல்லது.
முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா? கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு சாம்பாராக்கி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்க்க மறந்து விடாதீர்கள்.
முருங்கைக்காயை நறுக்கி பிளாஸ்டிக் கவரில் சிறு துளைகள் போட்டு, பிரிஜ்ஜில் வைக்கவும். முருங்கைக்காய் 8 முதல் 10 நாள் வரை அப்படியே இருக்கும்.
சமைத்த உணவு முழுமை பெறும் இடம் எதுவென்றால் உணவை தாளிக்கும் போதுதான். எல்லா சாமான்களையும் சரியாகப் போட்டாலும் தாளித்தால்தான் அந்த சமையல் மணக்கும்.
தாளிப்பது என்பது பெரும்பாலான நாட்டு உணவு முறைகளில் இல்லாத ஒன்றாகும். ஆனால் அந்த தாளிப்பில் எத்தனை ரகசியங்கள் ஒளிந்திருக்கின்ற என்று உங்களுக்குத் தெரியுமா?
தாளிக்கும் போது, கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போன்றவற்றைப் போடுகிறோம். இதில் ஒவ்வொன்றிலும் ஜீரணத்திற்கும், உடல் நலத்திற்கும் ஏற்ற நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஜீரணத்திற்கு உதவுவதிலும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும் கறிவேப்பிலை உதவுகிறது. வெந்தயமும், உளுந்தம் பருப்பும் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது. கடுகும், சீரகமும் ஜீரணத்திற்கு உதவுகிறது.
எனவே, தாளிப்பதை ஏனோ தேனாவென்று செய்யாமல் எல்லாவற்றையும் சரியாகப் போட்டு தாளித்துச் சாப்பிடுங்கள்.
இன்ஸ்டன்ட் உருளைக்கிழங்கு சைட் டிஷ் செய்வதற்கு ஒரு எளிய வழி, இரண்டு அல்லது மூன்று உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து, உருளைக் கிழங்கை போட்டு உப்பு, மசாலா பொடி தூவி லேசாக வதக்கியபின், பொடியாக நறுக்கிய கீரையைப் போட்டு, நீர் விட்டு வேகவைக்கவும். கீரை வெந்ததும் மசித்து, எலுமிச்சம் பழம் பிழிந்தால் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும்.
இட்லி செய்யும்போது வாசனை தூக்கலாக காணப்பட வேண்டுமானால், இட்லியை குக்கரில் வேகவிடும்போது குக்கர் தண்ணீரில் கொத்துமல்லி தழை, எலுமிச்சம் பழத் தோல் இவற்றைப் போட்டால் இட்லி வாசனையாக இருக்கும்.
தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
வீட்டிலேயே கேக் செய்யும் போது பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்ய தொடங்குங்கள்.

No comments:
Post a Comment