பச்சடி என்ற வார்த்தை பச்சை என்பதில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
அதாவது, சமைக்காமல் சாப்பிடும் விதத்தில் அதனை ருசியாக பக்குவப்படுத்துவதே பச்சடியாகும்.
இவை பெரும்பாலும் திரவமும், காய்கறிகளும் கலந்ததாக இருக்கும். பொதுவாக வெங்காயப் பச்சடி பிரபலமான இணை உணவாகும்.
தயிர் உடலை குளிர்ச்சியாக்கும். அதோடு ஜீரணத்திற்கும் நல்லது. தயிரோடு வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
தயிர் சேக்காமல் இனிப்பு சேர்த்து செய்யப்படும் மாங்காய் பச்சடி, பழப்பச்சடி, ஆகியவையும் உடலுக்கு நல்லதுதான்.
பச்சடியில் வெள்ளரி பச்சடி, காய்கறி பச்சடி, தயிர் பச்சடி என இன்னும் பல வகைகள் உள்ளன.
போலி செய்யும் போது வெறும் தேங்காய் அல்லது கடலைப் பருப்பு பூரணத்தை வைத்து சலித்து விட்டதா? மாறுதலாக ஒரு நாள் தேங்காய் துருவலுடன் உடைத்த கடலையை பொடி செய்து பூரணமாக வைக்கலாம்.
வீட்டில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜாமையும் பூரணமாக வைத்து செய்யலாம்.
குலோப் ஜாமுனை ஜீராவிலேயே போட்டு வைக்க வேண்டாம்.
சர்க்கரைப் பொங்கலில் பயத்தம் பருப்பையும் மில்க் மெய்ட்டையும் சேர்த்து செய்யுங்கள். நன்றாக இருக்கும்.
மைசூர் பாகு என்றால் அதில் கடலை மாவுதான் போட வேண்டும் என்றில்லை. பாசிப் பருப்பு மாவையும் சேர்த்து செய்யலாம்.
வீட்டில் எதுவுமே இல்லா விட்டாலும் கூட, பாலையும், சர்க்கரையையும் சேர்த்து 1 மணி நேரத்தில் சுவையான பால்கோவா செய்து விடலாம்.
வாழைக்காய் பொடிமாஸ் செய்வது மிகவும் எளிதானது. ஆனால் அதனை மிகவும் ருசியாகவும் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
வாழைக்காய் பொடிமாஸ் செய்ய வாழைக் காயை மிகவும் பொடியாக அல்லாமல் மிதமான அளவில் நறுக்குவது மிகவும் முக்கியம்.
கடுகு போட்டு தாளிக்கும் போது அதனுடன் ஒரு தேக்கரண்டு உளுத்தம் பருப்பை போட்டால் வாழைக்காய் பொடிமாஸ் சுவை கூடும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் வாழைக்காயை போட்டு வதக்க வேண்டும்.
புளிப்பு சுவை பிடித்தவர்கள் வாழைக்காய் பொடிமாஸில் சில துளி எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.
வாழைக்காய் பொடிமாஸ் காரக் குழம்பு வகைக்கு ஏற்ற இணை உணவாகும்.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. இத்தகைய சிறப்பு மிக்க கடுகிற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.
பொதுவாக நாம் கடுகை சமையலில் தாளிப்பதற்கு பயன்படுத்துகிறோம். அதாவது, நாம் சமைக்கும் சமையல் ஜீரணமாக அடிப்படையான கடுகை முதலில் போடுகிறோம். ஏன் என்றால் கடுகு ஜீரணத்திற்கு உதவுகிறது.
தாளிப்பதில் முக்கியப் பங்கே கடுகுதான். கடுகு வெடிக்கும் போது அதில் உள்ள காரம் எண்ணெயில் கலந்து, அதனை உணவில் சேர்க்கும் போது உணவு முழுவதும் எளிதாக ஜீரணிக்கக் கூடிய ஏற்பாட்டை கடுகின் காரம் செய்து விடுகிறது.
தாளிக்காமல் எந்த உணவுப் பொருளும் முழுமையடையாத வகையில் நமது உணவு முறை அமைக்கப்பட்டுள்ளதே கடுகின் மகத்துவத்தை உணர்ந்துதான்.
கடுகுடன் சீரகமும், கறிவேப்பிலையும் சேர்த்துப் போட்டு தாளிப்பது இன்னும் சிறந்தது ஆகும்.
சேனைக் கிழங்கை விரைவாக வேக வைக்க வேண்டும் என்றால் ஒரு எளிய வழி உள்ளது. அதாவது, சேனைக் கிழங்கை வேக வைக்கும் முன்பு வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும்.
பின்னர் அந்த பாத்திரம் நன்கு சூடேறியதும் சிறிது கல் உப்பு போட்டு வெடிக்க விடவும்.
கல் உப்பு முழுவதுமாக வெடிக்கும் வரை வறுத்துவிட்டு பின்பு தண்ணீர் ஊற்றி கொதித்ததும் கிழங்கைப் போடவும்.
இப்படி செய்தால் சேனைக் கிழங்கு விரைவில் வெந்துவிடும்.
சேனைக் கிழங்கை வறுவல் செய்வதற்கு முன்பு அதில் சிறிது புளித் தண்ணீரை விட்டால் சுவையாக இருக்கும்.
முட்டையை வேக வைக்கும் போது ஒடு வெடிக்காமல் இருக்க கொஞ்சம் உப்பு, அல்லது வினிகர் கலந்து வேக வைக்கவும்.
வெங்காயத்தினை நறுக்கும் முன் சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து பின்பு நறுக்கினால் கண்களில் தண்ணீர் வருவதை தடுக்கலாம்.
பாலுடன் கொஞ்சம் ஏலக்காய் கலந்து காய்ச்சினால் பால் நல்ல மணமாகவும், நீன்ட நேரம் புளிப்பு ஏறாமல் இருக்கும்.
தோல் உரித்த உருளைக்கிழங்குகளை கெடாமல் வைப்பதற்கு சில துளிகள் வினிகரை தெளித்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.
ஈரமான காய்கறிகளை ஒரு பேப்பரில் சுற்ற பிரிஜ்ஜில் வைத்தால் அழுகுவது தவிர்க்கப்படும்.
மிளகாய் தூள் அரைக்கும் போது தனியா அதிகமாக இருக்கும்படி வாங்கி காய வைத்து அரைக்கவும்.

No comments:
Post a Comment