Tuesday, April 19, 2011

காலை‌ டிபனு‌க்கு கவ‌னி‌க்க

காலை‌யி‌ல் எழு‌ந்து ம‌திய உணவு‌க்கு தயா‌ர் செ‌ய்வதா‌, காலை உணவு‌க்கு எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று குழ‌ம்‌பிய பல பெ‌ண்க‌ள் நேர‌த்தை ‌வீணா‌க்‌கி‌விடுவா‌ர்க‌ள்.
பெரு‌ம்பாலான ‌‌வீடுக‌ளி‌ல் காலை டிப‌ன் சா‌ப்‌பிடுவத‌ற்கு நேரமே இரு‌க்காது. ஆனாலு‌ம் சுவையான டிப‌ன் ம‌ட்டு‌ம் தயாராக இரு‌க்கு‌ம்.

அ‌ப்படி சுவையான டிப‌னு‌ம் செ‌ய்து, அதனை சா‌ப்‌பிட நேரமு‌ம் ‌கிடை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல்...

ம‌திய‌த்‌தி‌ற்கு சா‌ம்பா‌ர் செ‌ய்யு‌ம் நா‌ட்க‌‌ளி‌ல், காலை‌ டிபனு‌க்கு பொ‌ங்க‌ல் அ‌ல்லது இ‌ட்‌லி செ‌ய்து, சா‌ம்பாரையே தொ‌ட்டு‌க் கொ‌ள்ள கொடு‌க்கலா‌ம்.

தோசை சுடு‌ம் நா‌ட்க‌ளி‌ல், தோசை‌யிலேயே மசாலா‌க்களை, (பரு‌ப்பு, தே‌ங்கா‌ய், ‌மிளகா‌ய் அரை‌த்த ‌விழுது) சே‌ர்‌த்து தோசை சு‌ட்டு‌வி‌ட்டா‌ல் தொ‌ட்டு‌க் கொ‌ள்ள த‌னியாக ஒ‌ன்‌று‌ம் செ‌ய்ய வே‌ண்டா‌ம்.
வறுவல் அல்லது கூட்டு செய்யும்போது உப்போ காரமோ அதிகமாகிவிட்டதா, கவலைப்படாதீர்கள், ரஸ்க்கை தூளாக்கி அதில் கலந்துவிட்டால் சரியாகிவிடும். ரஸ்க் இல்லையென்றால் பிரெட் தூளையும் உபயோகிக்கலாம்.

பெரும்பாலும் வெண்டைக்காயை நறுக்கி சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். அவ்வாறு ஒட்டிக்கொள்ளாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும். உதிரி உதிரியாக வெண்டைக்காயை சமைத்து எடுக்கலாம்.

கோழிக்கரியை சமைக்கும்போது அதிலுள்ள கொழுப்பை நீக்க வேண்டுமானால் சுத்தம் செய்யும்போதே கோழியின் தோலை நீக்கவும்.

சென்னா போன்ற பருப்பு வகைகளை சமைப்பதற்கு முந்தின நாளே ஊற வைக்க மறந்துவிட்டீர்களானால், நன்றாகக் கொதித்த தண்ணீரில் சமைப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அவற்றை ஊற வைக்கவும்.

பா‌த்‌திர‌த்‌தி‌லபொ‌ங்க‌ல் செ‌ய்ய நேர‌ம் அ‌திகமாக எடு‌க்‌கிறதா, ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌‌ல் பரு‌ப்பையு‌ம், ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் அ‌ரி‌சியையு‌ம் ஒரே நேர‌த்‌தி‌ல் வேக வை‌த்து இறு‌தியாக கல‌ந்துபாரு‌ங்க‌ள்.

மாலை‌யி‌ல் நொறு‌க்கு‌த் ‌தீ‌னி‌க்காக செ‌ய்யு‌ம் மசா‌ல் வடைகளை குழ‌ம்‌பிலு‌‌ம் போ‌ட்டு வடை குழ‌‌ம்பு செ‌ய்து வை‌த்து ‌விடலா‌ம். 
சே‌மியா, ரவை, நூடு‌ல்‌ஸ் எ‌ல்லா‌ம் பழைய கதையா‌கி‌வி‌ட்டது. த‌ற்போது ம‌க்ரோ‌னிதா‌ன் குழ‌ந்தைக‌ளி‌ன் ‌விரு‌ப்ப உணவாக மா‌றி‌வி‌ட்டது.

ம‌க்ரோ‌னியை ‌நீ‌ங்கள‌் ‌விரு‌ம்‌பிய படி எதுவே‌ண்டுமானாலு‌ம் செ‌ய்யலா‌ம்.

ம‌க்ரோ‌னியை சமை‌க்க எ‌ளிதாக ஒரு ஐடியா வை‌‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.

மக்ரோ‌னியை த‌‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி வேக வை‌த்து எடு‌த்து‌க் கொ‌‌ள்ளவு‌ம். வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌‌ற்‌றி தா‌ளி‌த்து வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி ப‌ச்சை ‌மிளகா‌ய் போ‌ட்டு வத‌க்‌கி, அ‌தி‌ல் மசாலா‌த் தூ‌ள், உ‌ப்பு சே‌‌ர்‌த்து சே‌ர்‌த்து ‌‌பி‌ன்ன‌ர் ம‌க்ரோ‌னியை கொ‌ட்டி ‌கிளறவு‌ம்.

உ‌ங்களுக‌்கு ‌விரு‌ப்பமான சுவை‌‌யி‌ல் இது ‌கிடை‌க்கு‌ம். ம‌க்ரோ‌னி‌யி‌ல் லெம‌ன் ‌பி‌ழி‌ந்து தா‌ளி‌த்து‌க் கொ‌ட்டியு‌ம் சா‌ப்‌பிடலா‌ம்.

நூடு‌ல்‌சு‌க்கு வரும‌் மசாலாவை‌ சே‌ர்‌த்து‌ம் ம‌க்ரோ‌னியை சமை‌க்கலா‌ம்.
 
பொதுவாக பலரது ‌வீடுக‌ளி‌ல், வார‌த்‌தி‌ல் ஒரு நா‌ள் இ‌ட்‌லி‌க்கு மாவு அரை‌த்து அதை ‌கு‌ளி‌ர்பத‌ன‌ப் பெ‌ட்டி‌‌யி‌ல் வை‌த்து‌வி‌ட்டு, வார‌ம் முழு‌க்க தேவை‌ப்படு‌ம் போதெ‌ல்லா‌ம் பய‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளுவா‌ர்க‌ள்.

அ‌ப்படி பய‌ன்படு‌த்து‌ம் போது, ஒரு பெரிய பாத்திரத்தில் மொத்தமாக எ‌ல்லா மாவையு‌ம் வைக்க வே‌ண்டா‌ம்.

ஒரு நாளைக்குத் தேவையான அளவு கொள்ளும் அளவு‌க்கு மாவை சின்னச் சின்னப் பாத்திரங்களில் வைத்தால் அந்த ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்து மாவு தீர்ந்த பிறகு தேய்க்கப் போட்டுவிடலாம்.

பெரிய பாத்திரம் என்றால் மாவை எடு‌த்து‌‌க் கொ‌ண்டு, ‌பிறகு மாவு‌க்கே‌ற்ற வேறொரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் மாற்ற வேண்டும்.

தேவையில்லாமல் பெரிய பாத்திரங்களை ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதால் கரண்ட் செலவும் அதிகம். ம‌ற்ற‌ப் பொரு‌ட்களை வை‌க்கவு‌ம் ‌சிரமமாக இரு‌க்கு‌ம். 
 நம் பராமரிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய பொரு‌ட்க‌ளி‌ல் கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌ட்டியு‌ம் ஒ‌ன்று.
ஒரு காலத்தில் பெரிய பணக்கார வீடுகளில் மட்டும்தான் வாங்க முடியும் என்று கருதப்பட்ட ஃப்ரிட்ஜ் இன்று வீட்டுக்கு வீடு இருக்கிறது.

சமை‌த்த கா‌ய்க‌றி‌க‌ள் முத‌ல், சமை‌க்க பய‌ன்படு‌த்து‌ம் கா‌ய்க‌றிக‌ள், பழ‌ங்க‌ள் வரை அனை‌த்தையு‌ம் ‌‌ஃ‌பி‌‌ரி‌ட்ஜு‌க்கு‌ள் வை‌க்கலா‌ம்.

எதை வை‌த்தாலு‌ம் அது ந‌ல்ல முறை‌யி‌ல் இரு‌க்‌கிறதா எ‌ன்பதை சோ‌தி‌த்து‌வி‌ட்டு வை‌க்கலா‌ம். கெ‌ட்டு‌ப் போன பொரு‌ட்களை உடனடியாக அ‌ப்புற‌ப்படு‌த்‌தி ‌விடு‌ங்க‌ள்.

ஊறுகா‌ய், பு‌ளி‌க்குழ‌ம்பு போ‌ன்றவ‌ற்றை ஃ‌பி‌ரி‌ட்ஜு‌க்கு‌ள் வை‌க்க வே‌ண்டா‌ம். அது எ‌ளி‌தி‌ல் க‌ெ‌ட்டு‌ப் போகாது.

ஃ‌பி‌ரி‌ட்ஜை அடி‌க்கடி ஆஃ‌ப் செ‌ய்து‌வி‌ட்டு ‌மீ‌ண்டு‌ம் போடுவதா‌ல் ‌மி‌ன்சார‌ம் அ‌திகாமக‌ செலவாகு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.சில வயதானவ‌ர்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் அ‌‌ரி‌சி சாத‌ம் சா‌ப்‌பிட‌க் கூடாது, கோதுமை தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று மரு‌த்துவ‌ர்க‌ள் வ‌லியுறு‌த்‌தி இரு‌ப்பா‌ர்க‌‌ள்.

ஆனா‌ல் ‌தினமு‌ம் ச‌ப்பா‌த்‌தி ‌பிசைவது எ‌ன்பது அவ‌ர்களு‌க்கு ‌சிரமமாக இரு‌க்கு‌ம். எனவே ச‌ப்பா‌த்‌‌தி‌க்கு ப‌திலாக கோதுமை தோசை சு‌ட்டு சா‌ப்‌பிடலா‌ம்.

வெறும‌் கோதுமை தோசை யாரு‌க்கு‌ம் ‌பிடி‌க்காது. எனவே, அ‌தி‌ல் வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், வே‌ர்‌க்கடலை, மு‌ந்‌தி‌ரி‌ப் பரு‌ப்பு போ‌ன்றவ‌ற்றை பொடியாக நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு கல‌ந்து தோசை சு‌ட்டு‌ச் சா‌ப்‌பிடலா‌ம்.

இதனை ரு‌சியாக செ‌ய்தா‌ல் தொ‌ட்டு‌க் கொ‌ள்ள எதுவு‌ம் வே‌ண்டா‌ம். வெ‌ங்காய‌ம், ப‌ச்சை ‌மிளகா‌ய், பரு‌ப்பு வகைக‌ள் இரு‌ப்பதா‌ல் இது சா‌ப்‌பிடவு‌ம் ரு‌சியாக இரு‌க்கு‌ம்.

மெ‌ன்று ‌தி‌ண்ண முடியாம‌ல் ‌சிரம‌ப் படுப‌வ‌ர்களு‌க்கு‌ம் இது எ‌ளிதான உணவாக அமையு‌ம்.

No comments:

Post a Comment