Monday, April 18, 2011

வேலையை எ‌ளிதா‌க்கு‌ம் வ‌ழிக‌ள்

பூண்டை சுலபமாக உரிக்க சூப்பரான வழி ஒன்று இருக்கிறது. பூண்டை மைக்ரோவேவில் ஓரு 10 விநாடிகள் வைத்து எடுத்து, ஆறவைத்து பிறகு உரித்துப்பாருங்கள. தோல் எளிதில் கழன்று வரும். மை‌க்ரோவே‌வ‌ன் இ‌ல்லாதவ‌ர்க‌ள் கவலை‌ப்பட வே‌ண்டா‌ம். பூ‌ண்டை த‌ண்‌ணீ‌ரி‌ல் ஊற‌வி‌ட்டு ‌உ‌ரி‌த்தா‌ல் எ‌ளிதாக தோ‌ல் உ‌ரியு‌ம்.
தேங்காய் மூடியை கு‌ளி‌ர்சாதன‌ப் பெ‌ட்டி‌யி‌ன் ப்ரீசரில் 3 மணி நேரம் வைத்து பிறகு எடுத்து துருவுங்கள். சிரமமில்லாமல் சர சரவென்று துருவிவிடலாம்.

காய்கள், பழங்கள் வாங்கும்போது நல்ல சிவப்பு நிறமாக இருப்பதையே வாங்க வேண்டும். அவற்றில்தான் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

எலுமிச்சையிலிருந்து அ‌திக சா‌ற்றை ‌பி‌ழி‌ந்தெடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் பழத்தை ஒரு 10 நொடிகள் மைக்ரோவேவ‌னி‌ல் வைத்துப் பிறகு பிழிந்து பாருங்களேன்.
வேலையை எ‌ளிதா‌க்கு‌ம் வ‌ழிக‌ள்

சில உணவுகளை‌ச் சமை‌த்த ‌பி‌ன் ஓவனில் ஒரு மாதிரியாக வாடை வரு‌ம். இத‌ற்கு ந‌ல்ல‌த் ‌தீ‌ர்வு ஒ‌ன்றை‌க் இ‌ங்கு கூறு‌கிறோ‌ம்.

ஒரு பாத்திரத்தில் இளஞ் சூடான வெ‌ந்நீரை எடுத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள். அதில், பயன்படுத்திய டீ தூ‌ள் அ‌ல்லது டீ பேக்‌ஸ், கொஞ்சம் வினிகர், துளி எலுமிச்சை சாறு எல்லாம் சே‌ர்‌த்து, இதை 5 நிமிஷம் ஓவனில் வைத்துப் பாருங்கள். சென்ட் போட்டா மாதிரி ஓவன் மணமணக்கும்.

மேலு‌ம், மை‌க்ரோவே‌வ் அவ‌னி‌ல் உணவுக‌ளி‌ன் வாசனை ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டா‌ல், ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் ‌சி‌றிது எலு‌மி‌ச்ச‌ம் சாறை ஊ‌ற்‌றி அதனை ஒரு ‌நி‌மிட‌ம் அவ‌னி‌ல் வை‌த்து எடு‌க்கவு‌ம்.

இ‌ப்படி செ‌ய்வதா‌ல் உணவு வகைக‌ளி‌ன் வாசனை போ‌ய்‌விடு‌ம்.

உ‌ங்களுடைய ஓவனை சு‌த்த‌ப்படு‌த்துவதாக இரு‌ந்தாலு‌ம் ச‌ரி, ஓவனுட‌ன் வ‌ந்த செய‌ல் ‌விள‌க்க‌ப் பு‌த்தக‌த்தை‌ப் படி‌த்த ‌பி‌ன்னரே செ‌ய்யவு‌ம். 
குழ‌ந்தைகளு‌க்கு பொதுவாக தோசை எ‌ன்றா‌ல் ‌விரு‌ம்‌ப‌ம்தா‌ன். ஆனா‌ல் எ‌ப்போது‌ம் தோசை ம‌ட்டு‌ம் சு‌ட்டு‌க் கொடு‌க்கு‌ம் அ‌ம்மா‌க்க‌ள் ‌மீது வெறு‌ப்பு வருவது‌ம் இய‌ற்கைதா‌ன்.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு‌ம் ‌பிடி‌த்த வகை‌யிலு‌ம், அவ‌ர்களு‌க்கு ஒரு ச‌த்தான உணவை அ‌ளி‌‌ப்பது எ‌ன்ற வகை‌யிலு‌ம் தோசை சுட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் மு‌ட்டை தோசை தா‌ன் முத‌லிட‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

தோசை‌யி‌ல் ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ‌பிடி‌த்த சுவைகளை‌த் த‌னி‌த்த‌னியாக சே‌ர்‌க்கலா‌ம்.

வெறு‌ம் ச‌ர்‌க்கரை வை‌த்து குழ‌ந்தைகளு‌க்கு ஊ‌ட்டுவதாக இரு‌ந்தா‌ல், தோசை சுடு‌ம் போது அத‌ன் மேலேயே ச‌ர்‌க்கரையை‌த் தூ‌வி‌வி‌ட்டா‌ல் தோசை மாவுட‌ன் ச‌ர்‌க்கரை‌க் கல‌ந்து சுவை கூடு‌ம்.

தே‌ங்கா‌ய்‌த் துருவலுட‌ன் ச‌ர்‌க்கரை‌க் கல‌ந்து தோசை‌‌யி‌ன் ‌மீது தூ‌‌வியு‌ம், வெறு‌ம் துருவலை ம‌ட்டு‌ம் தூ‌வியு‌ம் தோசை சுடலா‌ம்.

வீ‌ட்டி‌ல் செ‌ய்து வை‌த்‌திரு‌க்கு‌ம் ‌மிளகா‌ய்‌ப் பொடியை தோசை ‌வா‌ர்‌த்தது‌ம் அத‌ன் ‌மீது தூ‌வி எடு‌க்கலா‌ம். இதுதா‌ன் கார‌ப்பொடி தோசையாகு‌ம்.
பொதுவாக இ‌ட்‌லி மாவு எ‌ன்றா‌ல் அ‌தி‌ல் இ‌ட்‌லி, தோசை ம‌ட்டு‌ம்தா‌ன் செ‌‌ய்வோ‌ம். ஆனா‌ல், இ‌ட்‌லி மாவை‌க் கொ‌ண்டு ப‌ல்வேறு சுவையான டிப‌ன்களை செ‌ய்து அச‌த்தலா‌ம்.

வெறு‌ம் வெ‌ள்ளை இ‌ட்‌லியை எ‌ப்படி‌த்தா‌ன் சா‌ப்‌பிடுவது எ‌ன்று ச‌லி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் குழ‌ந்தைக‌ள் இரு‌க்கு‌ம் ‌வீடுக‌ளி‌ல், ‌நிற‌ப்பொடிகளை அதாவது கேச‌ரி‌ப் பொடிகளை வா‌ங்‌கி வ‌ந்து மா‌வி‌ல் கல‌ந்து வ‌ண்ண வ‌ண்ண இ‌ட்‌லிகளை ஊ‌ற்‌றி‌க் கொடு‌க்கலா‌ம்.

அ‌தி‌ல்லாம‌ல், பரு‌ப்பு வகைகளை தா‌ளி‌த்து‌ப் போ‌ட்டு, வெறு‌ம் தே‌ங்காயை வத‌க்‌கி‌ப் போ‌ட்டு, கா‌ய்க‌றிகளை பொடியாக‌த் துரு‌வி‌ப் போ‌ட்டு, உல‌ர்‌ந்த பழ‌ங்களை, உல‌ர்‌‌ந்த தா‌னிய‌ங்க‌ள் அதாவது மு‌ந்‌தி‌ரி, ‌பி‌ஸ்தா போ‌ன்றவ‌ற்றை ஒ‌ன்‌றிர‌ண்டாக அரை‌த்து‌ப் போ‌ட்டு இ‌ட்‌லி சுடலா‌ம்.

மாவில் வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் அரைத்து ஊற்றி சுவையான இட்லி செ‌ய்யலா‌ம்.

கடலை‌ப்பரு‌ப்பு, உளு‌த்த‌ம் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய், கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் ஆ‌கியவ‌ற்றை எ‌ண்‌ணை‌யி‌ல் பொ‌ன் வறுவலாக வறு‌த்து ‌பிறகு மா‌வி‌ல் கல‌ந்து அதனை இ‌ட்‌லி சு‌ட்டா‌ல் ஒ‌ன்று‌க்கு இர‌ண்டாக சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.
 

No comments:

Post a Comment