Monday, April 18, 2011

அவ‌லி‌ல் எ‌ன்னெ‌ன்ன செ‌ய்யலா‌ம்

பொதுவாக அவ‌ல் எ‌ன்பது அ‌ரி‌சி‌யி‌ல் இரு‌ந்து செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு உணவு‌ப் பொருளாகு‌ம். அவ‌லி‌ல் இர‌ண்டு வகைக‌ள் உ‌ள்ளன. அவை ‌சிவ‌ப்ப‌ரி‌சி‌யி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் அவ‌ல், ம‌ற்றொ‌ன்று சாதாரண அ‌ரி‌சி‌யி‌ல் செ‌ய்ய‌ப்படுவதாகு‌ம்.
அவ‌ல் பொதுவாக உடலு‌க்கு ந‌ல்லது. அவலை வை‌த்து பல வகையான உணவு‌ப் ப‌ண்ட‌ங்களை செ‌ய்யலா‌ம்.

அதாவது, ரவை‌க்கு ப‌திலாக அவலை ந‌ன்கு வறு‌த்து சுடுத‌ண்‌ணீ‌‌ரி‌ல் போ‌ட்டு எடு‌த்து அவ‌ல் உ‌ப்புமா செ‌ய்யலா‌ம்.

இதே‌ப்போல, அவலை நெ‌ய்‌வி‌ட்டு வறு‌த்து ஒ‌ன்‌றிர‌ண்டாக‌ப் பொடி‌த்து கேச‌ரியு‌ம் செ‌ய்யலா‌ம்.

அவ‌‌ல் பாயாச‌ம் எ‌ப்படி செ‌ய்வது எ‌ன்று பலரு‌க்கு‌ம் தெ‌ரியு‌ம்.

அவலை சுடுத‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு வேகவை‌த்து எடு‌த்து எலு‌மி‌ச்சை சாத‌ம் கூட செ‌ய்யலா‌ம். ‌மிகவு‌ம் அருமையாக இரு‌க்கு‌ம்.

No comments:

Post a Comment