Monday, April 18, 2011

சமை‌க்கு‌ம் போது எ‌ண்ணெ‌யி‌ல் கவன‌ம்

தோசை சுடும் பொழுது எண்ணெயை சுற்றி வர ஊற்றினால் அதிகமாகிவிடும். அத‌ற்கு பதில் ஒரு கிண்ணத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி வைத்து வெங்காயத்தினை முக்கி தோசைகல்லில் தேய்த்து பின்பு தோசை மாவு ஊற்றினால் சுவையும் அதிகமாக இருக்கும். அதிக எண்ணெயும் நம் உடலுக்குள் சேராது.
சப்பாத்தி சூடும் பொழுது எண்ணெயினை பயன்படுத்த வேண்டாம். சுக்கா சப்பாத்தியாக சாப்பிடலாம்.

பால்,மோர்,தயிர்,கீரை,காய்கறிகள் போன்றா உணவுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.

கோ‌ழி‌க்க‌றி சமைக்கும் பொழுது குறைவாகவே எண்ணெய் சேர்க்கவும். கோ‌ழி‌க்‌க‌றி‌யி‌ல் இருந்தே நிறைய எண்ணெய் சமைக்கும் பொழுது வெளியாகும்.

ஆ‌ட்டு‌க்க‌றி பிரியாணி சமைக்கும் பொழுது நெய் அதிகம் சேர்த்தால் சுவை குறைந்து திகட்டிவிடும்.

கோ‌ழி‌க்க‌றி, மீன், ஆ‌ட்டு‌க்க‌றி, பஜ்ஜி, பக்கோடா என்று டீப் ப்ரை செய்யாமல் அத‌ற்கு பதில் அதிக எண்ணெய் இல்லாத தந்தூரி, கிரில் போ‌ன்ற உணவு‌ப் பதா‌ர்‌த்த‌ங்களாக செ‌ய்து சாப்பிடலாம்.
எண்ணெயினை சிலர் தூக்கில் அல்லது எண்ணெய் கேனில் ஊற்றி வை‌த்‌திரு‌ப்பா‌ர்க‌ள். அப்படி வைத்து பயன்படுத்தும் பொழுது நேரடியாக அப்படியே பா‌த்‌திர‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி சமை‌க்காம‌ல் ஒரு கரண்டியில் எடுத்து தேவைக்கு தகுந்தது போல் ஊற்றவும்.

அ‌ல்லது, ஒரு ‌சி‌றிய ட‌ப்பா‌வி‌ல் ஊ‌ற்‌றி வை‌த்து சமை‌க்க‌ப் பய‌ன்படு‌த்தலா‌ம். இதனா‌ல் எ‌ண்ணெ‌யி‌ன் பய‌ன்பாடு குறையு‌ம்.

வீ‌ட்டி‌ல் சமையலு‌க்கு ‌சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்ட (‌ரீபை‌ன்‌டு) எ‌ண்ணெயை‌ப் பய‌ன்படு‌த்‌தினா‌ல், ‌சி‌றிய அள‌வி‌ல் ந‌ல்லெ‌ண்ணையு‌ம் வா‌ங்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

மிளகா‌ய் பொடி போ‌ன்று நேரடியாக எ‌ண்ணையை சா‌ப்‌பிடு‌ம் உணவுகளு‌க்கு ந‌ல்லெ‌ண்ணையை பய‌ன்படு‌த்தலா‌ம்.

ச‌ட்‌‌னி, மோ‌ர் போ‌ன்றவ‌ற்றை தா‌ளி‌க்க ‌மிகவு‌ம் குறை‌‌ந்த அளவு எ‌ண்ணெயை‌ப் பய‌ன்படு‌த்தவு‌ம்.
எலுமிச்சையிலிருந்து சாறை எடுக்கும் முன் அதனை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தால் சாறு அதிகமாக வரும்.

முட்டையை அதிக நேரம் கொதிக்க வைத்து விட்டால் உரிக்கும் முன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் வைக்கவும்.

பாலில் தயாரிக்கும் உணவுகளுடன் பழச் சாற்றை சேர்க்க வேண்டுமானால், சாறை துளித் துளியாக சேர்த்தால் பால் திரியாமல் இருப்பதோடு ருசியும் கூடும்.

அடை, தோசை போன்ற மாவு தயாரிப்புகளில் நெய் சேர்க்க வேண்டுமானால், பதார்த்தம் ஆறியவுடன் சேர்க்கவும்.

ஆப்பிளை நறுக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் ஆப்பிள் கறுப்பாகாமல் இருக்கும்.

எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை தட்டில் போடும் முன் வடிகட்டி அல்லது உறிஞ்சு தாளில் வைக்கவும்.
மென்மையான காய்கறிகளை தோலுடன் சமைக்கவும். காய்கறியை நெய்யில் வறுக்க வேண்டுமென்றால் காரம் அதிகமாக சேர்க்க வேண்டாம். போதுமான அளவுக்கு வறுத்தால் நலம். ஏனெனில் சத்துகள் வற்றாமல் இருக்கும்.

கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கிய‌ப் ‌பிறகு த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு கழுவ வே‌ண்டா‌ம். நறு‌க்குவத‌ற்கு மு‌ன்பே கழு‌வி ‌விடுவது ச‌த்து‌க்களை பாதுகா‌க்க உதவு‌ம்.

பொதுவாக கா‌‌ய்க‌றிகளை ஆ‌வி‌யி‌ல் அதாவது த‌ட்டு‌ப் போ‌ட்டு மூடி வை‌த்து வேக வை‌ப்பது ந‌ல்லது.

அரை வே‌க்காடாக கா‌ய்‌க‌றிகளை வேக வை‌த்து சா‌ப்‌பிடுவது‌ம் ‌சிற‌ந்தது. க‌த்‌தி‌ரி‌க்கா‌ய் போ‌ன்றவ‌ற்றை முழுமையாக வேக வை‌த்து சா‌ப்‌பிடவு‌ம்.

மு‌ந்தைய நா‌ள் இரவே கா‌ய்க‌றிகளை நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்வது ச‌த்து‌க்களை வெ‌ளியே‌ற்‌றி‌விடு‌ம். அ‌ப்படி நறு‌க்குவதாக இரு‌ந்தா‌ல் பா‌லி‌தீ‌ன் கவ‌ரி‌ல் இறு‌க்கமாக மூடி வை‌க்கவு‌ம்.  
பாலாடை அல்லது சீஸ் உருகாமலும் கெடாமலும் இருக்க வினீகரில் நனைத்த துணியில் சீஸை சுற்றி அதனை நன்கு இறுக மூடிய பாத்திரத்தில் வைக்கவும்.

சமையலுக்கு கேஸ் அடுப்பை பற்ற வைக்கும் முன் தேவையான பொருட்களை முன்னமே எடுத்து வைத்துக் கொள்ளவும் இதனால் எரிபொருள் வேஸ்ட் ஆவதைத் தவிர்க்க முடியும்.

காய்கறிகளை சமைக்கும் போது சீக்கிரம் ஆக வேண்டும் என்பதற்காக அடுப்பை பெரிதாக எரிய விடும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். இதனால் அதிலுள்ள சத்துகள் குறைந்து விடும், குக்கரில் சமைத்தால் அதன் சத்து பாதுகாக்கப்படும்.

சமோசாக்கள் தயாரிக்கும்போது கோதுமை மாவுடன் அல்லது மைதா மாவுடன் அரிசி மாவைச் சேர்க்கவும்.

ப‌ஜ்‌ஜி தயா‌ரி‌க்க வெறு‌ம் கடலை மாவை வா‌ங்காம‌ல், போ‌ண்டா-ப‌ஜ்‌ஜி மாவு எ‌ன்று கே‌ட்டு வா‌ங்‌கி செ‌ய்து பா‌ர்‌க்கவு‌ம்.  
  

No comments:

Post a Comment