Monday, April 18, 2011

சமையலு‌க்கு ஏ‌ற்ற த‌க்கா‌ளி

த‌க்கா‌ளி சாத‌ம் செ‌ய்யு‌ம் போது த‌க்கா‌ளி‌த் தொ‌க்‌கி‌ல் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுது சே‌ர்‌ப்பதை த‌வி‌ர்‌த்தா‌ல் ரு‌சி ந‌ன்றாக இரு‌க்கு‌ம். இ‌ட்‌லி, தோசை‌க்கு தொ‌ட்டு‌க்கொ‌ள்ள த‌க்கா‌ளி தொ‌க்கு செ‌ய்யு‌ம் போது அ‌தி‌ல் இ‌ஞ்‌சி, பூ‌ண்டு ‌விழுதை சே‌ர்‌த்தா‌ல் ரு‌சி அருமையாக இரு‌க்கு‌ம்.

ச‌ந்தை‌யி‌ல் இர‌ண்டு வகையான த‌க்கா‌ளி ‌கிடை‌க்‌கிறது. ஒ‌ன்று பெ‌ங்களூ‌ர் த‌க்கா‌ளி, ம‌ற்றொ‌ன்று நா‌ட்டு‌த் த‌க்கா‌ளியாகு‌ம். பெ‌ங்களூ‌ர் த‌க்கா‌‌ளியை ‌விட நா‌ட்டு‌த் த‌க்கா‌ளிதா‌ன் சமைய‌லி‌ல் ரு‌சி‌க்கு‌ம் ஏ‌ற்றது, உட‌ம்பு‌க்கு‌ம் ஏ‌ற்றது.
வீ‌ட்டி‌ல் ஏராளமான த‌க்கா‌ளி இரு‌க்‌கிறது. எ‌ங்காவது ஊரு‌க்கு ‌கிள‌ம்‌பு‌கி‌றீ‌ர்க‌ள். த‌க்கா‌ளி ‌வீணா‌கிறதே எ‌ன்று கவலை‌ப்ப‌ட்டா‌ல், ஒரே ‌நி‌மிட‌த்‌தி‌ல் த‌க்கா‌ளியை ‌மி‌க்‌சி‌யி‌ல் அரை‌த்து வடிக‌ட்டி‌வி‌ட்டு அ‌தி‌ல் ச‌ர்‌க்கரை, எலு‌மி‌ச்சை சாறு கல‌ந்து ஐ‌ஸ்க‌‌ட்டி போ‌ட்டு‌க் குடி‌த்து‌விடு‌ங்க‌ள். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

த‌க்கா‌ளி‌யி‌‌ல் ம‌னித உட‌லி‌ல் உ‌ள்ள ர‌த்தத‌த்தை சு‌த்த‌ம் செ‌ய்யு‌ம் ஆ‌ற்ற‌ல் உ‌ள்ளது. எனவே த‌க்கா‌ளியை ந‌ல்ல முறை‌யி‌ல் சா‌ப்‌பிடலா‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு த‌க்கா‌ளியை ப‌ச்சையாக சா‌ப்‌பிட‌க் கொடு‌த்து பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். உடலு‌க்கு‌ம் ந‌ல்லது.

No comments:

Post a Comment