தக்காளி பழங்களை வாங்கியதும் பச்சையாக உடனே ஃப்ரிஜிற்குள் வைக்காதீர்கள். அதற்கு பதிலாக அதன் காம்பு பாகம் பாத்திரத்தில் படும்படியாக வைத்து, அது பழுத்த பின்னர் ஃப்ரிஜிற்குள் வைக்கவும்.
காலை உணவிற்கு பின் நூடுல்ஸ் மீதம் வந்தால், அதனுடன் சில பச்சை காய்களை நறுக்கி, தயிர் சேர்த்து ஒரு சாலட் தயாரிக்கலாம்.
காலை டிபனுக்கு அரிசி குருணையில் உப்புமா செய்வது வழக்கம். அவ்வாறு செய்கையில், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, அதே அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி, வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த உப்புமா, புதுமையாகவும் சுவையோடும் காணப்படும்.
உருளைக்கிழங்குகள் முளைவிடாமலிருக்க, அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் பழத்தையும் வைக்கவும்.
சிலருக்கு இட்லி கனமாகவும் கெட்டியாகவும் காணப்படும். மல்லிப்பூ போன்ற இட்லி வேண்டுமானால், இட்லிக்கு உளுந்தைக் குறைத்து, கெட்டியாக அரைத்து வேக வைக்கும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கொண்டால், இட்லி மிருதுவாக காணப்படும்.
உங்கள் மாத மளிகைச் சாமான் பட்டியலில் வேர்க்கடலை அவசியம் இடம் பெற வேண்டும். ஏனெனில் வேர்க்கடலையின் அவசியம் அதிகமாகும்.
வேர்க்கடலையை வாங்கி வந்து பொன்னிறமாக வறுத்து தோலை உரித்து சுத்தம் செய்து, ஒரு டப்பாவில் போட்டு பத்திரமாக வைத்திருங்கள்.
திடீரென விருந்தாளிகள் வந்தால் அவசரத்திற்கு வேர்க்கடலைச் சட்னி செய்து அசத்தலாம்.
மாலை வேலை இனிப்பு பலகாரம் செய்யும் போது முந்திரி இல்லையேல் கவலைப் பட வேண்டாம். வறுத்த வேர்க்கடலையை நெய்யில் பொரித்துப் பரிமாறலாம்.
வறுத்த வேர்கடலையை உடைத்து, பொரியல் செய்யும் போது சேர்த்துக் கொண்டால், கூடுதல் சுவையும், சத்தும் கிடைக்கும்.
வெரைட்டி சாதம் செய்யும் போது வேர்க்கடலையை சேர்த்தால் சுவை இன்னும் கூடும்.
கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
கேக் செய்வதற்கு முன் 10-15 நிமிடங்கள் ஓவனை சூடாக்கவும். அதன் சூட்டின் அளவை அறிந்துக்கொள்ள சிறிய அளவு மாவைக்கொண்டு முதலில் குக்கீஸ் செய்து பார்க்கலாம்.
வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை பிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் பிரிட்ஜில் வைக்கலாம்.
சப்பாத்தி மாவை தயாரிக்கும் போது தயிர் அல்லது முட்டை சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.

No comments:
Post a Comment